2017ம் ஆண்டிற்குள் அனைத்தும் புதிய மாடல்களாக மாற்ற வால்வோ திட்டம்

By Saravana

வரும் 2017ம் ஆண்டிற்குள் தனது அனைத்து கார்களிலும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த வால்வோ திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

இரண்டாம் தலைமுறை வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் ஹெட்லைட் படம் டீசராக வெளியிடப்பட்டுள்ளது. புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய தலைமுறை வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் சேஸீ முதல் பெரும்பான்மையான பாகங்கள் முற்றிலும் புதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Volvo Car

அதிக உறுதித்தன்மை கொண்ட போரன் ஸ்டீல் மூலம் சேஸீ உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, புதிய தலைமுறை எக்ஸ்சி90 எஸ்யூவியில் 90 சதவீத பாகங்கள் முற்றிலும் புதியதாக பயன்படுத்தப்பட்டுள்ளது. டீசர் படத்தில் ஹெட்லைட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் சுத்தியல் போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது.

மேலும், இரண்டாவது வரிசை இருக்கையை வசதிகேற்ப நகர்த்திக் கொள்ள முடியும். இதுதவிர, ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி உலகின் மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாடலாக வர இருக்கிறது. இந்த நிலையில், எக்ஸ்சி90 எஸ்யூவி போன்றே தனது அனைத்து கார் மாடல்களையும் புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைத்து வெளியிட வால்வோ திட்டமிட்டுள்ளது.

வரும் 2017ம் ஆண்டிற்குள் தனது அனைத்து கார்களின் புதிய மாடலை வெளியிட வால்வோ திட்டமிட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலிய ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. இதுதவிர, எக்ஸ்சி90 எஸ்யூவியில் ஹைபிரிட் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனை பின்பற்றி வரும் புதிய கார் மாடல்களிலும் ஹைபிரிட் மாடல்களை கொண்டு வருவதற்கும் வால்வோ நிறுவனத்திடம் திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் இரு வாரங்களில், அதாவது வரும் 26ந் தேதி சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் வைத்து புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் கோதென்பர்க் நகரிலுள்ள டார்ஸ்லேண்டா ஆலையிலிருந்து இந்த புதிய எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட உள்ளதாக வால்வோ தெரிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #volvo #four wheeler #வால்வோ
English summary
According to the reports, Volvo will renew its entire lineup within the next three years.
Story first published: Thursday, August 14, 2014, 9:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X