டாடா ரெவோட்ரான் டர்போ எஞ்சின் தொழில்நுட்பத்தை விளக்கும் விளம்பரம்

By Saravana

புத்தம் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுக்கான விளம்பர பிரச்சார நடவடிக்கைகளை டாடா மோட்டார்ஸ் துவங்கியுள்ளது. ஃபார்முலா-1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் இந்த விளம்பர பிரச்சாரத்தை துவங்கி வைத்தார்.

இந்த புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுக்கு ரெவோட்ரான் என்று டாடா பெயரிட்டுள்ளது. இந்த புதிய எஞ்சினின் பராக்கிரமங்களை வாடிக்கையாளர்களிடம் தெரிந்துகொள்ளும் விதத்தில் புதிய விளம்பர பிரச்சார நடவடிக்கைகளை டாடா மோட்டார்ஸ் துவங்கியுள்ளது. இந்த புதிய விளம்பர பிரச்சாரத்தை சற்று வித்தியாசமான முறையில் செய்கிறது டாடா மோட்டார்ஸ்.

இதற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ரெவோட்ரான் லேப் என்ற பெயரில் ரெவோட்ரான் எஞ்சினின் சிறப்பம்சங்களை தெரிந்துகொள்வதற்கான பிரத்யேக சிமுலேட்டர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ரெவோட்ரான் எஞ்சின் பற்றிய வீடியோ கேம், எஞ்சின் சப்தத்தின் சிறப்பம்சத்தை விளக்கும் வீடியோ மற்றும் தகவல்களை அளிக்கும் திரைகளுடன் கூடிய சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு வருபவர்களுக்கு ரெவோட்ரான் எஞ்சின் பற்றிய முழுத் தகவல்களையும் மிக எளிதாக பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, நாடு முழுவதும் உள்ள 75 டாடா மோட்டார்ஸ் கார் டீலர்ஷிப்புகளிலும் இந்த புதிய ரெவோட்ரான் எஞ்சின் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

New Tata Engine

டாடா அறிமுகம் செய்திருக்கும் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் கொண்டது. விரைவில் விற்பனைக்கு வரும் டாடா ஸெஸ்ட் மற்றும் போல்ட் கார்களில் இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Tata Motors has been working extensively on producing an all new engine for its future models. The Indian manufacturer has developed a Revotron 1.2t engine, which will power the Bolt and Zest. Wizcraft has begun an aggressive campaign to promote the new Revotron engine.
Story first published: Thursday, July 10, 2014, 9:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X