விற்பனையில் உலகின் நம்பர்- 1 ஆக வாகை சூடிய மாருதி ஆல்ட்டோ கார்!

By Saravana

விற்பனையில் உலகின் நம்பர்- 1 கார் என்ற பெருமையை மாருதி ஆல்ட்டோ கார் பெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக விற்பனையில் இந்தியாவின் நம்பர் - 1 கார் பிராண்டாக மாருதி ஆல்ட்டோ வலம் வருகிறது.

இந் நிலையில், கடந்த 2013ம் ஆண்டில் விற்பனையில் உலகின் நம்பர்- 1 கார் என்ற பெருமையை ஆல்ட்டோ பெற்றிருக்கிறது. ஆல்ட்டோ 800 மற்றும் ஆல்ட்டோ கே10 ஆகிய இரு கார்களின் விற்பனையும் இதில் அடக்கம். இருந்தாலும், கடந்த 2012ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு ஆல்ட்டோ காரின் விற்பனை சரிவு கண்டுள்ளது.

உலக அளவில் கார் மார்க்கெட்டில் ஏற்பட்ட சரிவு காரணமாக, பெரும்பாலான முன்னணி கார்களின் விற்பனையும் சரிவு கண்டதால், ஆல்ட்டோ காருக்கு உலகின் நம்பர்- 1 அந்தஸ்து கிடைத்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் அதிகபட்சமாக 3.11 லட்சம் ஆல்ட்டோ கார்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. விற்பனையில் முன்னணி வகித்த கார் மாடல்களின் விபரம் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாருதி ஆல்ட்டோ கார்

மாருதி ஆல்ட்டோ கார்

கடந்த 2013ம் ஆண்டில் 2,65,777 ஆல்ட்டோ கார்கள் விற்பனையானது. 2012ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு விற்பனை 7.3 சதவீதம் சரவு கண்டுள்ளது.

டொயோட்டா அக்வா (ஜப்பான்)

டொயோட்டா அக்வா (ஜப்பான்)

மாருதி ஆல்ட்டோ காரைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தை ஜப்பானில் விற்பனையாகும் டொயோட்டா அக்வா கார் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு 2,62,367 அக்வா கார்கள் விற்பனையாகின. கடந்த 2012ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு 1.58 சதவீதம் விற்பனையில் சரிவு ஏற்பட்டது.

ஃபோக்ஸ்வேகேன் கோல் (பிரேசில்)

ஃபோக்ஸ்வேகேன் கோல் (பிரேசில்)

கடந்த ஆண்டில் பிரேசில் மார்க்கெட்டில் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் கோல் கார் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் 2,55,057 கோல் கார்கள் விற்பனையாகின. 2012ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 12 சதவீதம் குறைவு.

 ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் (ஜெர்மனி)

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் (ஜெர்மனி)

கடந்த ஆண்டு ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார் நான்காம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 2,44,249 கோல்ஃப் கார்கள் விற்பனையாகின. கடந்த 2012ம் ஆண்டுடன் விற்பனையை ஒப்பிடுகையில், 1.47 சதவீதம் குறைந்துள்ளது.

 ஹோண்டா என்- பாக்ஸ் (ஜப்பான்)

ஹோண்டா என்- பாக்ஸ் (ஜப்பான்)

ஹோண்டா என்- பாக்ஸ் கார் ஐந்தாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 2,34,995 என்- பாக்ஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. 2012ம் ஆண்டு விற்பனையைவிட கடந்த ஆண்டு என்- பாக்ஸ் காரின் விற்பனை 11.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

 டைஹட்சூ மூவ் (ஜப்பான்)

டைஹட்சூ மூவ் (ஜப்பான்)

கடந்த ஆண்டு 6ம் இடத்தில் உள்ள கார் மாடல் டைஹட்சூ மூவ். கடந்த ஆண்டில் மொத்தம் 2,05,333 மூவ் கார்கள் விற்பனையாகியுள்ளன. இது 2012ம் ஆண்டைவிட 40.6 சதவீதம் கூடுதலாகும்.

Most Read Articles
English summary
Maruti Alto, India's best selling car for the past nine years, finally became the best selling car in the world in 2013. Maruti Alto, which includes the Alto, 800 and K10 nameplates, actually saw a decline in sales in 2013 and has been in a downward trend for the past three years.
Story first published: Saturday, March 1, 2014, 16:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X