உலகின் அதிவேக டீசல் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்: விபரம்

By Saravana

உலகின் அதிவேக டீசல் ஸ்போர்ட்ஸ் காரை இங்கிலாந்தை சேர்ந்த டிரைடென்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டிரைடென்ட் நிறுவனத்தின் உரிமையாளரும், டிசைனருமான பில் பெவன் இந்த காரை வடிவமைத்துள்ளார்.

ஐஸ்னி மேக்னா என்ற பெயரிலான ஃபாஸ்ட்பேக் மாடலிலும், வென்ச்சுரர் என்ற பெயரிலான கார் எஸ்டேட் வகையிலான மாடலாகவும் வந்துள்ளன. இதில், ஐஸ்னி மேக்னா பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாகவும், கவர்ச்சிகரமான டிசைன் கொண்டதாகவும் இருக்கிறது. உலகின் அதிவேக டீசல் ஸ்போர்ட்ஸ் காரான ஐஸ்னி மேக்னாவின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

ஐஸ்னி மேக்னா காரில் 6.6 லிட்டர் வி8 டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 395 பிஎச்பி பவரையும், 948 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும்.

டாப் ஸ்பீடு எவ்வளவு

டாப் ஸ்பீடு எவ்வளவு

ஐஸ்னி மேக்னா கார் அதிகபட்சமாக மணிக்கு 306 கிமீ வேகத்தை தொடும் ஆற்றல் கொண்டது. எனவே, இதுதான் டீசல் எஞ்சின் கொண்ட உலகின் அதிவேக ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக குறிப்பிடப்படுகிறது. பெர்ஃபார்மென்ஸ் கார்கள் என்றால் மைலேஜை பற்றி பேசக்கூடாது என்ற எழுதப்படாத விதி ஆட்டோமொபைல் துறையில் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த கார் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாவும் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

டிரைடென்ட் அறிமுகம் செய்துள்ள ஐஸ்னி மேக்னா, வென்ச்சுரர் ஆகிய இரு கார் மாடல்களும் சிறப்பான மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை டேங்கில் முழுவதும் எரிபொருள் நிரப்பினால் 3,218 கிமீ வரை செல்லும் என்கிறது டிரைடென்ட்.

எரிபொருள்

எரிபொருள்

மினரல் அல்லது பயோ டீசலில் இந்த கார்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கும் உகந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக குறிப்பிடுகிறது டிரைடென்ட்.

கஸ்டமைஸ் மாடல்

கஸ்டமைஸ் மாடல்

ஒவ்வொரு காரும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்பேரில் கஸ்டமைஸ் செய்து தரும் வசதியும் இருப்பதாக டிரைடென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காருக்கு 39 விதமான கஸ்டமைஸ் ஆக்சஸெரீஸ்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

96,000 பவுண்ட் விலையில் இந்த கார் சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று டிரைடென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
A British sports car brand, Trident has announced their fastest and most efficient diesel sports car the Iceni, will be available globally for a price of 96,000 Pounds.
Story first published: Wednesday, April 30, 2014, 11:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X