120 பேர் பயணிக்கும் வசதிகொண்ட உலகின் மிக நீளமான எலக்ட்ரிக் பஸ்!

By Saravana

அமெரிக்காவின் ஹஸ்டன் நகரில் நடந்த பொது போக்குவரத்து வாகனங்களுக்கான கண்காட்சியில் உலகின் மிக நீளமான எலக்ட்ரிக் பஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

சீனாவை சேர்ந்த பி.ஒய்.டி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த பஸ்தான் தற்போது உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகனமாகவும் குறிப்பிடப்படுகிறது. லான்காஸ்டர் இ-பஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் சுற்றுச்சூழலுக்கு மாசு தராத இந்த பிரம்மாண்டமான எலக்ட்ரிக் பஸ் பற்றிய பல கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


பயண தூரம்

பயண தூரம்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் பயணம் செய்யும். பகல் முழுவதும் இயக்க முடியும் என்றும், இரவில் மட்டும் சார்ஜ் செய்தால் போதுமானதாக இருக்கும் என்று பி.ஒய்.டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பஸ்சின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 2 முதல் 4 மணிநேரம் பிடிக்கும். இந்த பஸ்சில் 120 பேர் பயணிக்கும் வசதி கொண்டது. பக

மின் மோட்டார்

மின் மோட்டார்

இந்த எலக்ட்ரிக் பஸ்சில் 550என்எம் டார்க்கை வழங்கும் 150kW மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பஸ் சரிவான பாதையில் சிறப்பாக செல்லும் என்பதால் மலைப்பாங்கான சாலைகளிலும் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.

பேட்டரி சார்ஜ்

பேட்டரி சார்ஜ்

இந்த பஸ்சில் பொருத்தப்பட்டிருக்கும் ஐயன்- பாஸ்பேட் பேட்டரி 10,000 முறை சார்ஜ் செய்யலாம். இந்த பேட்டரி 25 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பேட்டரி தீப்பிடிக்காத தொழில்நுட்பம் கொண்டது.

இப்படியும் சார்ஜ்

இப்படியும் சார்ஜ்

லான்காஸ்டர் இ-பஸ்சின் சிறப்பம்சங்களில் ஒன்று, இதன் ஒரு பஸ்சிலிருந்து மற்றொரு பஸ்சுக்கு சார்ஜ் செய்ய முடியும் என்பதே.

அவசர காலத்தில்...

அவசர காலத்தில்...

அவசர காலத்தில் கட்டடங்களுக்கு தேவையான மின்சாரத்தை இந்த பஸ்சின் பேட்டரியிலிருந்து சப்ளை பெற முடியும்.

 பெங்களூரில் சோதனை

பெங்களூரில் சோதனை

இந்த பஸ்சை தயாரித்திருக்கும் சீனாவை சேர்ந்த பி.ஒய்.டி நிறுவனத்தின் கே9 என்ற எலக்ட்ரிக் பஸ் பெங்களூரில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

Most Read Articles
English summary
Electric vehicles are the future, however, there have been concerns over how many kilometres these vehicles can run per single electric charge. Introducing the world's largest battery electric vehicle—the Lancaster eBus. The eBus has been developed by BYD Motors and was premiered at this year's American Public Transportation Association (APTA) Expo in Houston.
Story first published: Tuesday, October 21, 2014, 15:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X