இந்தியாவில் டயர் உற்பத்தியை துவங்கியது யோகஹாமா!

டயர் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமான யோகஹாமா இந்தியாவில் டயர் உற்பத்தியை துவங்கியுள்ளது.

முந்துங்கள்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!

கடந்த 2007ம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்த யோகஹாமா நிறுவனம் இந்தியாவில், ரேடியல் மற்றும் ஆஃப்ரோடு வகை டயர்களை யோகஹாமா விற்பனை செய்து வருகிறது. வெளிமார்க்கெட்டில் யோகஹாமா டயர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, யோகஹாமாவின் ஆஃப்ரோடு டயர்களுக்கு இளைஞர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது.

Yokohama Tyre

இந்தநிலையில், இந்தியாவில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தும் விதத்தில் ஹரியானா மாநிலம், பகதுர்கர் என்ற இடத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் புதிய டயர் ஆலையை யோகஹாமா அமைத்துள்ளது. இந்த புதிய ஆலையில் டயர் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய டயர் ஆலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 டயர்களை உற்பத்தி செய்ய முடியும்.

இந்தியாவிலேயே டயர்களை உற்பத்தி செய்வதன் மூலம் மிக சரியான விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரூ.4,500 முதல் ரூ.6,150 வரையிலான விலையில் இந்தியாவில் யோகஹாமா டயர்கள் கிடைக்கின்றன.

Most Read Articles
English summary
The Japanese tyre manufacturer has setup a facility in Bahadurgarh, Haryana, India. Yokohama has invested over INR 300 crore in their Indian facility. They will be capable of manufacturing 2,000 tyre a day with ease. The facility can produce more tyre in a day if need be.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X