இந்தியாவில் புதிய ஆஃப் ரோடு டயர்களை அறிமுகப்படுத்திய யோகஹாமா!

By Saravana

இந்தியாவில் புதிய ஆஃப் ரோடு டயர்களை ஜப்பானை சேர்ந்த யோகஹாமா அறிமுகம் செய்துள்ளது. யோகஹாமா ஜியோலேண்டர் என்ற பெயரில் இந்த புதிய டயர்கள் விற்பனைக்கு கிடைக்கும்.

சரளை கற்கள், மணல், சேறு, பனி படர்ந்த சாலை, மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் ஆற்றுப் படுகைகள் என ஒழுங்குப்படுத்தப்படாத எந்தவொரு சாலைகள் மற்றும் சீதோஷ்ண நிலையிலும் இந்த ஆஃப் ரோடு டயர்கள் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

Yokohama Offroad Tyres

மேலும், இவை பஞ்சர் ப்ரூப் வசதி கொண்டவை. இந்த யோகஹாமா ஜியோலேண்டர் பிராண்டு டயர்கள் 31x10.50 R15 மற்றும் 33x12.50 R15 என்ற இரு அளவுகளில் கிடைக்கும்.

இந்த புதிய டயர்கள் குறித்த யோகஹாமாவின் இந்தியப் பிரிவு தலைவர் தகேஷி ஃப்யூஜினோ கூறுகையில்," இந்தியாவில் ஆஃப் ரோடு பயணங்களில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், வார இறுதி நாட்களில் சாகசப் பயணங்கள் செல்வதும் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற இளைஞர்களின் பயணங்கள் சிறக்கும் வகையில் மிகச்சிறப்பான ஆஃப் ரோடு டயர்களை அறிமுகம் செய்துள்ளோம். தோற்றத்திலும், செயல்திறனிலும் இவை சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Most Read Articles
English summary

 Japanese tyre manufacturer Yokohama has launched its range of Geolandar tyres in India. The tyre is specially designed for off-road purpose. They tyre will perform to its optimum level, even in extreme conditions. The mud terrain tyres will be offered by Yokohama in India for the first time and will sport the Geolandar badge.
Story first published: Tuesday, June 24, 2014, 12:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X