விற்பனையில் பரிதாபகரமான இந்தியாவின் டாப் 10 கார்கள்!

விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த கார்கள் பற்றிய தொகுப்பை நேற்று படித்தீர்கள். இன்று ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் விற்பனையில் மிக மோசமான எண்ணிக்கையை பதிவு செய்து வரும் கார்களை பற்றி இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் கூட்டமைப்பான சியாம் வெளியிட்டிருக்கும் பட்டியலை வழங்கியுள்ளோம்.

கடந்த ஆண்டில் விற்பனையில் சொதப்பிய அதே மாடல்கள் தொடர்ந்து, பரிதாபகரமான நிலையில் இருந்து வருகின்றன. அதில் மிக மோசமான விற்பனையை பதிவு செய்து வரும் டாப் 10 கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 10. ஃபியட் அவென்ச்சுரா

10. ஃபியட் அவென்ச்சுரா

ஃபியட் புன்ட்டோ காரின் க்ராஸ்ஓவர் ரக மாடலாக பெரும் எதிர்பார்ப்புடன் ஃபியட் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், எதிர்பார்ப்பை தொடர்ந்து பொய்க்க செய்து வருகிறது அவென்ச்சுரா. ஏப்ரல்- ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் மொத்தமே 591 ஃபியட் அவென்ச்சுரா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இது ஃபியட்டுக்கும், அந்த கார்களின் ரசிகர்களிடத்தும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

09. நிசான் சன்னி

09. நிசான் சன்னி

சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான ஜோரில் பல முன்னணி கார் மாடல்களை விற்பனையில் பின்னுக்குத் தள்ளிய நிசான் சன்னியின் இப்போதைய நிலவரம் பரிதாபகரமாக உள்ளது. மிகச்சிறப்பான இடவசதி கொண்ட மிட்சைஸ் செடான் கார் மாடல் நிசான் சன்னி. ஆனால், புதிய ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா போன்ற சிறந்த டிசைன் கொண்ட கார்களுக்கு முன்னாள் நிசான் சன்னியின் டிசைன் எடுபடவில்லை. ஏப்ரல் - ஜூன் இடையிலான முதல் காலாண்டில் மொத்தமே 549 நிசான் சன்னி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 08. ரெனோ பல்ஸ்

08. ரெனோ பல்ஸ்

நிசான் மைக்ரா காரின் ரீபேட்ஜ் மாடலான ரெனோ பல்ஸ் தொடக்கம் முதலே எதையும் சாதிக்கவில்லை. கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடையிலான காலக்கட்டத்தில் மொத்தமே 497 ரெனோ பல்ஸ் கார்கள் மற்றுமே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

07. ஃபியட் லீனியா

07. ஃபியட் லீனியா

மிட்சைஸ் கார்களில் சிறப்பான மாடல்களில் ஒன்றாக இருந்தும், ஃபியட் நிறுவனத்தின் சர்வீஸ் கட்டமைப்பு மற்றும் விற்பனை கொள்கைகளால் போட்டியாளர்களுடன் மல்லுக்கட்ட திணறி வருகிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் இடையே வெறும் 411 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 06. ரெனோ ஸ்காலா

06. ரெனோ ஸ்காலா

நிசான் சன்னியின் ரீபேட்ஜ் மாடல்தான் இது. நிசான் சன்னியை விட விலை அதிகமாக நிலைநிறுத்தப்பட்ட இந்த காரின் விற்பனை சன்னியைவிட பரிதாபகரமாக உள்ளது. நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தமே 274 ரெனோ ஸ்காலா கார்கள்தான் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

05. செவர்லே ஸ்பார்க்

05. செவர்லே ஸ்பார்க்

உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஸ்டாக் உள்ள கார்கள் மட்டுமே சிறப்பு சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் இடையே 252 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

 04. ஃபோர்டு கிளாசிக்

04. ஃபோர்டு கிளாசிக்

மார்க்கெட்டில் நீண்ட காலமாக இருந்து வரும் இந்த மாடலுக்கு மாற்றாக புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரின் விற்பனை குறைவிற்கு பழமையான டிசைன் மற்றும் பின் இருக்கையில் போதுமான இடவசதி அளிக்காததும் காரணம். கடந்த ஏப்ரல் - ஜூன் இடையிலான மூன்று மாத காலத்தில் 236 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

 03. செவர்லே க்ரூஸ்

03. செவர்லே க்ரூஸ்

சிறந்த பெர்ஃபார்மென்ஸ் செடான் என்று பெயர் பெற்ற செவர்லே க்ரூஸ் கார் விலை அதிகம் என்ற காரணம், விற்பனையில் பின்தங்க செய்துவிட்டது. ஏப்ரல்- ஜூன் இடையில் 207 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. செவர்லே நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகளில் ஏற்பட்ட அவப்பெயர் காரணமாக, அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க இந்திய வாடிக்கையாளர்கள் தயங்குகின்றனர்.

02.ஃபோர்டு ஃபியஸ்ட்டா

02.ஃபோர்டு ஃபியஸ்ட்டா

மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் சிறப்பான மாடலாக இருந்தும் லீனியா போன்று மிக மோசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடையில் வெறும் 55 ஃபோர்டு ஃபியஸ்ட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

01. ரெனோ ஃபுளூயன்ஸ்

01. ரெனோ ஃபுளூயன்ஸ்

ரெனோ புளூயன்ஸ் காரின் விற்பனையும் அதள பாதாளத்தில் இருக்கிறது. ஏப்ரல் - ஜூன் இடையில் வெறும் 34 ரெனோ புளூயன்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

ரெனோ டாப்

ரெனோ டாப்

இந்த பட்டியலில் ரெனோ கார் நிறுவனத்தின் மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன. நிசான் மற்றும் ஃபியட் நிறுவனங்களின் மாடல்களும் தடுமாறி வருவது இந்த பட்டியல் மூலம் புலனாகிறது.

Most Read Articles
English summary
List of 10 worst selling cars in Q1 FY16.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X