டஸ்ட்டரை மறக்கச் செய்யும் புதிய ரெனோ க்ராஸ்ஓவர் மாடல்!

By Saravana

டஸ்ட்டரை மெல்ல வாடிக்கையாளர்கள் மறந்துவரும் நிலையில், ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய க்ராஸ்ஓவர் மாடலை ரெனோ கார் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல இருக்கும் இந்த புதிய மாடலுக்கு கட்ஜர் என்று பெயரிட்டு அழைக்கிறது ரெனோ. இந்த கட்ஜர் எஸ்யூவியின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

/strong>.

 நிசான்- ரெனோ கூட்டணி

நிசான்- ரெனோ கூட்டணி

நிசான் - ரெனோ கூட்டணியின் CMF பிளாட்ஃபார்மில் இந்த புதிய க்ராஸ்ஓவர் மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, நிசான் நிறுவனத்தின் காஸ்கய் எஸ்யூவியின் பல்வேறு டிசைன் தாத்பரியங்கள் மற்றும் பாகங்களை இந்த புதிய கட்ஜர் பங்கிட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், காஸ்கய் க்ராஸ்ஓவரைவிட இதனை கூடுதல் நீளம் கொண்டதாக வடிவமைத்துள்ளனர்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த க்ராஸ்ஓவர் மாடல் 19 செமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருப்பதால், உலகின் எந்தவொரு நாட்டின் சாலைகளையும் எளிதாக சமாளிக்கும். முன் மற்றும் பின் பக்கங்களில் ஸ்கிட் பிளேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சில் கார்டு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

வடிவம்

வடிவம்

கட்ஜர் க்ராஸ்ஓவர் 4.45 மீட்டர் நீளம், 1.84 மீட்டர் அகலம் மற்றும் 1.6 மீட்டர் உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு மூலம் 472 லிட்டர் பூட்ரூம் வசதி கொண்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

110 எச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்

130 எச்பி பவரை வழங்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்

130 எச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இதர தொழில்நுட்ப அம்சங்கள்

இதர தொழில்நுட்ப அம்சங்கள்

இந்த மூன்று எஞ்சின் மாடல்களும் ஸ்டார்ட்/ ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் கிடைக்கும். 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் வருகிறு.. 110 எச்பி டீசல் எஞ்சின் 6 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கும்.

வசதிகள்

வசதிகள்

டாம் டாம் நேவிகேஷன் சிஸ்டம், 7 இன்ச் டேப்லெட், வாய்ஸ் ரெககனிஷன், போஸ் மியூசிக் சிஸ்டம், ஆர்-2 லிங்க் மல்டிமீடியா சிஸ்டம் என்று ஏராளமான வசதிகளுடன் கலக்க வருகிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

ஆக்டிவ் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் அசிஸ்ட் தொழில்நுட்ப வசதி, 360 டிகிரி பிராக்ஸிமிட்டி சென்சார்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ம், லேன் டிபார்ச்சர் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் எச்சரிக்கை வசதி போன்றவற்றுடன் இந்த புதிய க்ராஸ்ஓவர் மாடல் வருகிறது.

இந்தியாவுக்கு வருமா?

இந்தியாவுக்கு வருமா?

ஐரோப்பிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும், சீனாவிலும் இந்த கார் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இந்தியாவில் இந்த புதிய க்ராஸ்ஓவர் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Most Read Articles
English summary
The long tease comes to an end as the Renault Kadjar makes its first public debut during the 2015 Geneva Motor Show. French carmaker Renault has big plans with the Kadjar crossover. The price of the Renault Kadjar will be announced closer to its launch date, which is in autumn this year.
Story first published: Thursday, March 5, 2015, 15:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X