ஹூண்டாய் எலைட் ஐ20 கூபே - படங்கள், தகவல்கள்!!

By Saravana

இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் 3 டோர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதே மாடலில் சில மாற்றங்களை செய்து ஐ20 கூபே என்ற பெயரில் இந்த புதிய மாடலை அழைக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

கூபே என்று அழைத்தாலும் ஓர் முழுமையான கூபே மாடலாக தெரிவிக்க இயலாது. ஐரோப்பிய மார்க்கெட்டில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய ஹூண்டாய் ஐ20 கூபே மாடலின் படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

ஜெர்மனியிலுள்ள டிசைன் சென்டரில்தான் இந்த காரில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

வெளிப்புற டிசைன்

வெளிப்புற டிசைன்

மூன்று பில்லர்களிலும் மாற்றங்களை செய்து வெளிப்புறத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். முன்புற பம்பர் டிசைனிலும், கிரில் டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்பாய்லர்

ஸ்பாய்லர்

பின்புறத்தில் கூரை 25 மிமீ தாழ்வாக்கப்பட்டுள்ளது என்பதுடன், டெயில்கேட் ஸ்பாய்லரும் கொடுக்கப்பட்டுள்ளது. 17 இஞ்ச் சக்கரங்கள் மற்றும் பெரிய வீல் ஆர்ச் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது.

 பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

ஹூண்டாய் ஐ20 கூபே கார் 83 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், 99 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வர இருக்கிறது. அடுத்த ஆண்டு 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டீசல் மாடல்

டீசல் மாடல்

டீசல் மாடலில் 74 பிஎச்பி பவரை வழங்கும் 1.1 லிட்டர் எஞ்சின் மற்றும் 89 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐரோப்பிய மார்க்கெட்

ஐரோப்பிய மார்க்கெட்

இது ஐரோப்பிய மார்க்கெட்டிற்கான மாடலாக விற்பனைக்கு செல்கிறது. அங்கு ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் ஐ30 மற்றும் ஐ40 கார்களில் இருக்கும் அதே வசதிகளுடன் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai has revealed the images of its new three-door version of the Hyundai i20, which is set to go on sale in spring 2015. Take a look. 
Story first published: Wednesday, January 21, 2015, 16:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X