ஆய்வுகளுக்காக புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் இறக்குமதி... விரைவில் அறிமுகம்?

By Ravichandran

ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக புதிய டெயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, விரைவில் இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டொயோட்டா நிறுவனம் இந்த புதிய ஃபார்ச்சூனர் காரை இறக்குமதி செய்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் பரிசோதனைகளும் விரைவில் நிகழத்தப்பட வாய்ப்பு உள்ளது. மெல்லிய தோற்றதை கொண்டுள்ள இதன் வடிவமைப்பு, முற்றிலும் புதிய தோற்றத்தை வழங்கியிருக்கிறது.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் முன் பகுதியில் உள்ள ஹெட்-லாம்புகள், வி-வடிவம் கொண்ட இரட்டை கிரில் அனைத்தும் க்ரோம் பூச்சுடன் ஜொலிக்கிறது.

மேலும், இதன் முன் பம்பர், அதை சுற்றியுள்ள பனி விளக்குகளிலும் க்ரோம் பூச்சு கொடுக்கப்பட்டிரு்பபதால், முகப்பில் க்ரோம் பூச்சு சற்று தூக்கலாகவே இருக்கிறது.

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் பெரிய சக்கர ஆர்ச்கள் கொண்ட ஃபெண்டர்கள் மற்றும் ஓ.ஆர்.வி.எம்-களில் உள்ள டர்ன் (வளைவு) இண்டிகேட்டர் அனைத்தும் கம்பீரமாக உள்ளது.

வடிவமைப்பு தளம்

வடிவமைப்பு தளம்

இந்த 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், ஹைலக்ஸ் பிக்-அப் டிரக் மற்றும் இன்னோவா வடிவமைக்கப்பட்ட டொயோட்டாவின் ஐ.எம்.வி எனப்படும் (இன்னோவேடிவ் மல்டி-பர்பஸ் வெஹிகிள்) வடிவமைப்பு தளத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா லேடர் ஃபிரேம் சேஸியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இதன் இண்டீரியர்களில் பல புதுமையான மாற்றங்களை செய்யப்பட்டுள்ளன. அதிக தொழில்நுட்ப வசதிகள் மட்டுமின்றி, உட்புறத்தில் அதிக அளவிலான இட வசதியும் இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

அடுத்த தலைமுறை ஃபார்ச்சூனர் காரில் புதிய ஜிடி சீரிஸ் வகையிலான இஞ்ஜின்கள் பொருத்தப்பட உள்ளது.

148 பி.ஹெச்.பி திறனை வெளிபடுத்தும் 2.4 லிட்டர் டர்போ-டீசல் இஞ்ஜினும், 175 பி.ஹெச்.பி திறனை வெளிபடுத்தும் 2.4 லிட்டர் இஞ்ஜினும், தற்போது உபயோகத்தில் உள்ள 2.5 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் இஞ்ஜின்களுக்கு மாற்றாக பொருத்தப்பட உள்ளது.

இந்த இஞ்ஜின்கள் அடுத்த தலைமுறை இன்னோவாவிலும் பிரயோகிக்கப்பட உள்ளது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை 22 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், ஹூண்டாய் சாண்டா ஃபே மற்றும் புதிய ஃபோர்ட் எண்டெவர், மிட்சுபிஷி பஃஜேரோ ஸ்போர்ட் மற்றும் ஷெவ்ரோலே ட்ரெய்ல்பிளேசர் உள்ளிட்ட ரக கார்களுக்கு போட்டியாக விளங்க உள்ளது.

Most Read Articles
English summary
2016 Toyota Fortuner Car is Imported to India For Research & Development. This 2016 Toyota Fortuner Car is expected to be launched at the Delhi Auto Expo.
Story first published: Monday, October 19, 2015, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X