டெல்லி பாரம்பரிய கார் திருவிழா - டிரைவ்ஸ்பார்க்கின் எக்ஸ்க்ளூசிவ் கவரேஜ்!

நாட்டின் கார் கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்துரைப்பதில் பாரம்பரிய கார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், கார்களின் வாடையே இல்லாத காலத்தில் ராஜாக்களுக்கு இணையான மரியாதையுடன் வலம் வந்த அந்த கார்கள் தன்னுள் பல்வேறு வரலாற்றுத் தகவல்களை சுமந்துகொண்டு உரிமையாளர்களுக்கு இன்றளவும் கவுரவம் சேர்த்து வருகின்றன.

இந்த நிலையில், பாரம்பரிய கார்களை போற்றுவதற்காக சமீபத்தில் டெல்லியில் 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் ராலி மற்றும் கண்காட்சி நடந்தது. அந்த கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பாரம்பரிய கார்கள் பங்கேற்றன. மேலும், இந்த கார் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி திருவிழாவில் இந்திய கார் பாரம்பரியத்திற்கு வித்திட்ட மஹாராஜாக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பாரம்பரிய கார் திருவிழாவின் முழுமையான செய்தித் தொகுப்பை ஸ்லைடரில் வாசகர்கள் கண்டு களிக்கலாம்.


டெல்லி பாரம்பரிய கார் திருவிழா

டெல்லி பாரம்பரிய கார் திருவிழா

வரலாறுகளை சுமந்து ஒய்யாரமாக வலம் வந்த ஏராளமான பாரம்பரிய கார்கள் மற்றும் கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

முதல் தரிசனம்

முதல் தரிசனம்

குர்கானில், 21 கன் சல்யூட் ரெஸ்ட்டாரண்டில் வைக்கப்பட்டிருந்த 1920 மாடல் விண்டேஜ் டாட்ஜ் கார் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மிகவும் சிறப்பான புனரமைக்கப்பட்டிருந்த இந்த கார் பாரம்பரிய கார் பிரியர்களை வரவேற்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தது.

புயிக் பாரம்பரிய கார்

புயிக் பாரம்பரிய கார்

குர்கான் லீஷர் வேலியில் நடந்த பாரம்பரிய கார் கண்காட்சிக்காக மிகவும் பத்திரமாக எடுத்து வரப்படும் புயிக் கார்.

கார் அணிவகுப்பு

கார் அணிவகுப்பு

டெல்லி, செங்கோட்டையிலிருந்து குர்கானுக்கு பாரம்பரிய கார் அணிவகுப்பு நடந்தது. அதற்கு தயார் நிலையில் நின்றிருந்த பாரம்பரிய கார்கள். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களில் கண்களை வசீகரித்த 1927 விப்பெட் ஓவர்லேண்ட் கார்.

ரேடியேட்டர் கேப்

ரேடியேட்டர் கேப்

விப்பெட் டிசைன் மிகவும் எளிமையாகவும், அதேநேரத்தில் கவரும் விதத்தில் இருந்ததது. குறிப்பாக, அதன் ரேடியேட்டர் மூடி இன்றளவும் அப்படியே பாழ்படாமல் பராமரிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 வாவ்...

வாவ்...

மரத்திலான ஸ்போக்குகள் கொடுக்கப்பட்டிருக்கும் விப்பெட் காரின் சக்கரங்கள் நிச்சயம் உங்களையும் மெர்சலாக வைக்கும்.

ஃபோர்டு விண்டேஜ் கார்

ஃபோர்டு விண்டேஜ் கார்

செங்கோட்டை வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் 1935 மாடல் ஃபோர்டு வி8 காரும் மிக சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தது. இந்த ஃபோர்டு வி8 கார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மதன் மோகனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப ஸ்பெஷல்

ரொம்ப ஸ்பெஷல்

செங்கோட்டை வாயிலிலிருந்து புறப்பட தயாராக இருந்த 1940 மாடல் புயிக் சீரிஸ் 40 ஸ்பெஷல் காரின் வண்ணம் மிகவும் பிரத்யேகமாக இருந்ததுடன், ஏராளமான சில்வர் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மிக தாராள இடவசதி, சிறப்பான எரிபொருள் சிக்கனத்திற்கு இந்த கார் பெயர் போனது.

ஆர்வம்

ஆர்வம்

ஒரே இடத்தில் ஏராளமான பாரம்பரிய கார்களை பார்த்த நம் மக்கள், அவற்றை ஆர்வமுடன் படம் பிடித்ததை காண முடிந்தது.

ஹூட் ராக்கெட்

ஹூட் ராக்கெட்

1950 களில் ஹூட் ராக்கெட் என்பது கார்களில் மிகவும் பிரபலமானது. மேலும், அமெரிக்க கார் சேகரிப்பாளர்கள் இதுபோன்ற ஹூட் ராக்கெட் பொருத்தப்பட்ட கார்களை விரும்பி சேகரிப்பது வழக்கம். இந்த ஹூட் ராக்கெட் கொண்ட கார் மாடல் எது தெரியுமா? அடுத்த ஸ்லைடில் படத்துடன் பார்க்கலாமே...

செவர்லே விண்டேஜ் கார்

செவர்லே விண்டேஜ் கார்

1957ம் ஆண்டு செவர்லே பெல் ஏர் செடான் கார்தான் ஹூட் ராக்கெட்டுடன் நம்மை வசீகரித்தது.

கேடில்லாக்கும் உண்டு

கேடில்லாக்கும் உண்டு

இந்த பாரம்பரிய கார் திருவிழாவில் பங்கேறஅற 1954ம் ஆண்டு கேடில்லாக் கன்வெர்ட்டிபிள் மாடல் பார்வையாளர்களை கவர்ந்தது. பம்பரிலேயே புகைப்போக்கி குழாய் கொடுக்கப்பட்டு மிகவும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்டதாக வெளியிடப்பட்டிருக்கிறது.

விண்டேஜ் அந்தஸ்து

விண்டேஜ் அந்தஸ்து

விண்டேஜ் அந்தஸ்து கொண்ட சரியான மாடலாக 1913 ஸ்டோவர் கார் மாடலை கூறலாம். அங்கு வந்திருந்தவர்களை வெகுவாக கவர்ந்த இந்த கார் பச்சை நிற பாடி பெயிண்ட்டிங்கும், மஞ்சள் வண்ண சக்கரங்களையும் கொண்டிருந்தது. மேலும், சில்வர் பூச்சுக்கு பதிலாக தங்க நிறத்திலான ஃபினிஷிங் மிகவும் கவர்வதாக இருந்தது. முன்னர் கண்ட 1957 செவர்லே பெல் ஏர் காரின் உரிமையாளரான பிகே.சவுத்ரியின் மற்றொரு விண்டேஜ் கார் மாடல்தான் இது.

மண்ணெண்ணெய் முகப்பு விளக்கு

மண்ணெண்ணெய் முகப்பு விளக்கு

அக்காலத்தில் மண்ணெண்ணெயில் எரியும் முகப்பு விளக்குகள் கார்களில் பயன்படுத்தப்பட்டன. இந்த காரில் ஸ்டைலான ரியர் வியூ கண்ணாடியும் உள்ளது.

 அணிவகுப்பு

அணிவகுப்பு

அணிவகுப்புக்காக அனைத்து கார்களும் ஒன்றன் பின் நிறுத்தப்பட்டிருந்தது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மாடர்ன் கார்களை பார்த்து பார்த்து பூத்து போன கண்களுக்கு இந்த பாரம்பரிய கார்கள் மனதுக்கு இதம் தந்தன.

பென்ட்லீ

பென்ட்லீ

மிக நீளமான மூக்குடன் காட்சி தந்த இந்த பென்ட்லீ கார் அக்காலத்தின் டிசைன் வல்லமைக்கு ஓர் சான்றாக அமைந்தது.

 செங்கோட்டை பின்னணி

செங்கோட்டை பின்னணி

வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை பின்னணியுடன் அழகுற காட்சி தரும் விண்டேஜ் கார்கள்.

செல்ஃபி மோகம்

செல்ஃபி மோகம்

வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் செல்ஃபி எடுப்பதிலேயே ஆர்வம் காட்டினர். பாதுகாப்புக்காக நின்றிருந்த செக்யூரிட்டியும் சந்தடி சாக்கில் விண்டேஜ் கார்களுடன் செல்ஃபி எடுக்கத் தவறவில்லை.

செவர்லே மாஸ்டர் ஈகிள்

செவர்லே மாஸ்டர் ஈகிள்

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த மதன் மோகனின் 1933ம் ஆண்டு செவர்லே மாஸ்டர் ஈகிள் விண்டேஜ் கார். தங்க நிற பெயிண்ட் செய்யப்பட்டு, சூரிய ஒளியில் மினுக்கிறது.

கார் மட்டுமா...

கார் மட்டுமா...

கார் மட்டும்தானா என்று அங்கலாய்க்கும் விண்டேஜ் மோட்டார்சைக்கிள் பிரியர்களுக்காக இந்த ஸ்லைடு. புனரமைக்கப்பட்ட விணடேஜ் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிளை காணலாம்.

இது அம்பாசடர் இல்ல...

இது அம்பாசடர் இல்ல...

சட்டென பார்ப்பதற்கு அம்பாசடர் போல தோற்றமளிக்கும் 1950ம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் 180 கார் மாடல்.

இது உங்கள் சாய்ஸ்...

இது உங்கள் சாய்ஸ்...

இது என்ன கார் என்பதை தெரிந்துகொள்ள அதிக முயற்சித்தும் பலனில்லை. தெரிந்தவர்கள் யாராவது கூறினால், அவர்களது பெயருடன் இந்த ஸ்லைடை அப்டேட் செய்கிறேன்.

ஃபோக்ஸ்வேகன் கன்வெர்ட்டிபிள்

ஃபோக்ஸ்வேகன் கன்வெர்ட்டிபிள்

1970களில் பிரபலமான ஃபோக்ஸ்வேகன் கார்மான் கியா கன்வெர்ட்டிபிள் மாடல் சிவப்பு நிறத்தில் தகதகத்தது. அக்காலத்தில் ஃபோக்ஸ்வேகனின் மிக அழகான தயாரிப்பாக பெயர் பெற்ற மாடல் இது.

 டெய்ம்லர் லிமோ

டெய்ம்லர் லிமோ

1980களில் டெயம்லர் வெளியிட்டி டிஎஸ்420 லிமோசின் கார் மாடல் இது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் திருமண விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. மிக நல்ல கண்டிஷனில் இந்த காரை டெல்லி சாலையில் பார்ப்பது வியப்புக்குரிய விஷயமே.

போன்டியாக்

போன்டியாக்

படத்தில் சில்வர் க்ரில் அமைப்பால் நடுங்க வைக்கும் இந்த கார் போன்டியாக் சில்வர் ஸ்ட்ரீக் செடான் கார். கரும் பச்சையும், சில்வர் வண்ணமும் இந்த காரின் பிரத்யேகத் தன்மைக்கு வலு சேர்க்கின்றன.

கப்பலுக்கும் இடம்...

கப்பலுக்கும் இடம்...

21 கன் சல்யூட் விண்டேஜ் கார் ராலியில் கார்கள் மட்டுமின்றி, கப்பலுக்கும் இடம்பெற்றிருந்தன. ஆம், கப்பல் போன்ற தோற்றமளிக்கும் 1960 புயிக் இன்விக்டா கன்வெர்ட்டிபிள் மாடலைத்தான் படத்தில் காண்கிறீர்கள்.

 ஸ்பெஷல் இடம்

ஸ்பெஷல் இடம்

வேகத்திற்கு பெயர் பெற்ற ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு ஆட்டோமொபைல் துறையில் மரியாதை அதிகம். அந்த வகையில், மிக சிறப்பாக பராமரிப்புடன் வசீகரித்த 1940 எம்ஜி டிசி காரை பார்க்கிறீர்கள்.

ஜெர்மன் எஞ்சினியரிங்...

ஜெர்மன் எஞ்சினியரிங்...

வடிவமைப்பில் ஐரோப்பிய கார்களுக்கு எப்போது கூடுதல் மதிப்பு உண்டு. அந்த மதிப்புக்கு சான்றாக நிற்கும் 1929 மெர்சிடிஸ் நர்பர்க் காரை படத்தில் காண்கிறீர்கள். விவேக் என்பவருக்கு சொந்தமான இந்த காரின் வரலாறும் கொஞ்சம் சுவையானதுதான். 8 சிலிண்டர் எஞ்சினுடன் வெளிவந்த முதல் மெர்க் கார் என்பதுடன், மணிக்கு 100 கிமீ டாப் ஸ்பீடு கொண்டதாக ஆட்டோமொபைல் பிரியர்களை கவர்ந்தது.

 விலை மதிப்பில்லாத...

விலை மதிப்பில்லாத...

விலை மதிப்பில்லாத என்ற சொல்லுக்கு நிகரான மாடல்தான் படத்தில் காணப்படும் 1933 ஹட்சன் 7 சீட்டர் ஓபன் டூரர் மாடல். உலகிலேயே ஒரே ஒரு கார்தான் தற்போது இருப்பதாக சொல்லப்படுகிறது.

மெர்க் மோட்டார்வேகன்

மெர்க் மோட்டார்வேகன்

இந்த காரை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். கார் வரலாற்றின் துவக்ககால மாடலாக காட்சி தரும் 1886 மெர்சிடிஸ் மோட்டார்வேகனின் மாதிரி மாடலை படத்தில் காண்கிறீர்கள்.

ஃபோர்டு மஸ்டாங்

ஃபோர்டு மஸ்டாங்

அமெரிக்காவின் புகழ்பெற்ற மஸில் கார் ரகத்தை சேர்ந்த ஃபோர்டு மஸ்டாங் காரும் டெல்லி கன் சல்யூட் விண்டேஜ் கார் ராலியில் பங்கெடுத்தது. மிகவும் நல்ல பராமரிப்பில் இருந்ததை காண முடிந்தது.

 மர நம்பர் பிளேட்

மர நம்பர் பிளேட்

மிக அழகாக இழைக்கப்பட்ட மரத்தாலான நம்பர் பிளேட்டும், டெயில் லைட்டையும் என்ன ஒரு கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர் பாருங்கள்.

 பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்

பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்

ஒயிட்வால் டயர்களுடன் காட்சி தந்த பிஎஸ்ஏ விண்டேஜ் மோட்டார்சைக்கிள்.

லாம்பரெட்டா

லாம்பரெட்டா

லாம்பரெட்டா 150 டி சீரிஸ் விண்டேஜ் ஸ்கூட்டர் மாடலும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சொர்க்கமே...

சொர்க்கமே...

பட்டு மெத்தையில் படுத்தால் கூட இந்த சுகம் வராது. குட்டித் தூக்கம்.

 ட்ரையம்ஃப் கார்

ட்ரையம்ஃப் கார்

இரட்டை வண்ணக் கலவையில் மிக அசத்தலாக மாடர்ன் கார்களுடன் போட்டி போடும் தகுதியுடன் டிரையம்ஃப் 1500 கிளாசிக் கார் மாடல் நின்றிருந்தது.

சிவப்பு அலங்காரம்

சிவப்பு அலங்காரம்

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் முற்றிலும் சிவப்பு அலங்காரத்தில் நின்றிருந்த விண்டேஜ் கார்.

நலநிதிக்கான திருவிழா

நலநிதிக்கான திருவிழா

காலை 11 மணிக்கு விண்டேஜ் கார் அணிவகுப்பு துவங்கியது. அறக்கட்டளை நலநிதி சேர்க்கும் விதத்தில் இந்த பாரம்பரிய கார் அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும், இந்த அணிவகுப்பின்போது மாற்றுத் திறனாளிகள் மற்றும் நரம்பியல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் காரில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

துவக்கம்

துவக்கம்

நிதின் டோஸா பாரம்பரிய கார் அணிவகுப்பை கொடியசைத்து துவங்கி வைத்தார். ஏராளமான பார்வையாளர்களும், பத்திரிக்கையாளர்களும் அங்கு குழுமியிருந்தனர்.

மெர்க் முதல் காரின் மாதிரி மாடல்

மெர்க் முதல் காரின் மாதிரி மாடல்

செங்கோட்டை வளாகத்தில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மோட்டார்வேகன் மாதிரி மாடலாக உருவாக்கப்பட்ட கார் ஓடி வருவதை காண்பதே ஒரு பாக்கியம்தான்.

 சாலைகளில் வலம்

சாலைகளில் வலம்

டெல்லி, செங்கோட்டையில் துவங்கி அணிவகுப்பு பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக குர்கானை நோக்கி சென்றது. படத்தில் 1954ம் ஆண்டு கேடில்லாக் சீரிஸ் 62 கன்வெர்ட்டிபிள் மாடலை காணலாம்.

 குர்கானில் நிறைவு

குர்கானில் நிறைவு

குர்கானில் அணிவகுப்பு முடிந்ததும் கார் கண்காட்சி நடந்தது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்ரிந்த ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் 1 போட் டெயில் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலை காணலாம். 1925ம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட மாடல் இது. 7.7 லிட்டர் எஞ்சின் கொண்டது.

ஜாகுவார்

ஜாகுவார்

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஜாகுவார் எம்கே7 மாடல். 10 அடி லாங் வீல்பேஸ் கொண்ட இந்த காரில் 3.5 லிட்டர் லிட்டர் எஞ்சின் கொண்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரை அளிக்கும். மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

 ஏபிசி பெடல்கள் இல்லை

ஏபிசி பெடல்கள் இல்லை

விண்டேஜ் காரில் பயணிக்கும்போதே அதன் உரிமையாளர் காரின் பெடல்கள் குறித்த ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார். தற்போது உள்ள மாடல்களை போன்று அல்லாமல், அந்த காரில் பிரேக் வலது பக்கத்திலும் ஆக்சிலரேட்டர் நடுவிலும், க்ளட்ச் இடது புறத்திலும் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். எனவே, எல்லோராலும் சட்டென இந்த காரை ஓட்டுவது கடினம்.

 மனநிறைவு

மனநிறைவு

இந்த கண்காட்சியில் ஏராளமான மஹாராஜாக்களும், கார் பிரியர்களும் திரண்டு வந்து தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் ஒரு பெரும் குறையாக இருந்தது காரின் விபரங்களை பார்வையாளர்கள் எளிதில் தெரிந்துகொள்ளும்படியான விபரப் பலகைகளை கொடுக்கப்படவில்லை. அது இருந்தால் இன்னும் சிறப்பான நிகழ்வாக அமைந்திருக்கும்.

Most Read Articles
English summary
The most comprehensive coverage of the 21 Gun Salute Vintage Car Rally held in Delhi and Gurgaon on February 21 and 22 with over 60 exclusive pictures. Read our report of the rally.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X