டொயோட்டா ஹைஏஸ் மெகா எம்பிவி காரின் 9 சிறப்பம்சங்கள்!!

சொகுசு ரதம் போன்ற ஓர் புதிய பயணிகள் வேன் மாடலை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டொயோட்டா நிறுவனம்.

பஸ் மார்க்கெட்டில் வால்வோ சொகுசு பஸ்கள் புரட்சியை ஏற்படுத்தியது போன்று, பயணிகள் வேன் செக்மென்ட்டில் இந்த புதிய ஹைஏஸ் புதிய டிரென்ட்டை உருவாக்கும் வாய்ப்புள்ளது. இந்த சொகுசு ரதத்தை பற்றிய 9 முக்கிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. தனிக்காட்டு ராஜா

01. தனிக்காட்டு ராஜா

இது விலையுயர்ந்த பயணிகள் வேன் என்ற புதிய ரகத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதேவிலையில் விற்பனை செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஆர் கிளாஸ் எம்பிவியும் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதால், தனிக்காட்டு ராஜாவாக இருக்கும்.

 02. இறக்குமதி மாடல்

02. இறக்குமதி மாடல்

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதேவேளை, அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 03. டாக்சி மார்க்கெட்

03. டாக்சி மார்க்கெட்

தனி நபர் மார்க்கெட்டை தவிர்த்து, டாக்சி மார்க்கெட்டை குறிவைத்து இந்த புதிய பயணிகள் வேன் களமிறக்கப்பட உள்ளது. இருப்பினும், தனிநபர் மார்க்கெட்டிலும் விற்பனை செய்வதற்கு அரசிடம் அனுமதி கோருவதற்கும் டொயோட்டா முடிவு செய்துள்ளது.

04. இருக்கை வசதி

04. இருக்கை வசதி

டொயோட்டா ஹைஏஸ் 10 இருக்கை வசதி கொண்ட மாடல். அதேவேளை, 10 பயணிகளுக்கும் மிக மிக தாராளமான இடவசதியை வழங்கும்.

05. எஞ்சின்

05. எஞ்சின்

டொயோட்டா ஹைஏஸ் வேனில் 134 பிஎச்பி பவரையும், 300என்எம் டார்க்கையும் வழங்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் யூரோ- 4 மாசுக்கப்பாட்டு அம்சம் கொண்டது. 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. சர்வதேச மார்க்கெட்டில் 148 எச்பி பவரையும், 241 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது.

06.சிறப்பம்சங்கள்

06.சிறப்பம்சங்கள்

பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், பவர் ஸ்லைடர் கதவுகள், ஏசி, ஃபேப்ரிக் இருக்கைகள் மற்றும் 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் போன்றவை உள்ளன.

07.விற்பனை இலக்கு

07.விற்பனை இலக்கு

முதலில் சிறு எண்ணிக்கையில் இருந்தாலும், இந்தியாவில் உற்பத்தி துவங்கும்போது மாதத்திற்கு 120 ஹைஏஸ் பயணிகள் வேன்களை விற்பனை செய்ய டொயோட்டா இலக்கு வைத்துள்ளது.

08. கஸ்டமைஸ் மாடல்

08. கஸ்டமைஸ் மாடல்

கஸ்டமைஸ் செய்வதற்கு சிறப்பானதாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளுக்கான ஓர் மிகச்சிறந்த சொகுசு வாகனம்; அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சார வாகனம்; பாலிவுட் நட்சத்திரங்களின் கேரவன்; பெரும் வர்த்தகர்களுக்கான நடமாடும் அலுவலகம் என பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற சொகுசு வாகனமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

09. அம்மாடியோவ்...

09. அம்மாடியோவ்...

ரூ.40 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய டொயோட்டா ஹைஏஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Most Read Articles
English summary
We are compiled 10 interesting facts of Toyota HiAce. Take a look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X