2017ல் ரிலீசாகும் ஏரோமொபில் பறக்கும் காரின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

2017ம் ஆண்டு ஏரோமொபில் நிறுவனத்தின் புதிய பறக்கும் கார் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வர இருக்கிறது. அமெரிக்காவின், டெக்சாஸ் நகரின் ஆஸ்டினில் நடந்த மாநாட்டில் இந்த அறிவிப்பை ஏரோமொபில் நிறுவனத்தின் சிஇஓ., ஜுராஜ் வாகுலிக் வெளியிட்டார்.

மேலும், முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும் பறக்கும் காரை உருவாக்கும் திட்டமும் இருப்பதாக அவர் கூறினார். இந்த அறிவிப்பு பறக்கும் கார் கனவை வெகு அருகாமையில் கொண்டு வந்துள்ளது. இன்னும் இரு ஆண்டுகளுக்குள் உலகின் முதல் பறக்கும் காராக வர்த்தக ரீதியில் வர இருக்கும் ஏரோமொபில் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்லோவாக்கிய நிறுவனம்

ஸ்லோவாக்கிய நிறுவனம்

ஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்த ஏரோமொபில் நிறுவனம் இந்த பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது.

பைலட் லைசென்ஸ்

பைலட் லைசென்ஸ்

இந்த பறக்கும் காரை முன்பதிவு செய்யும்போது, பைலட் லைசென்ஸ் அத்தாட்சி கொடுக்க வேண்டும்.

டேக் ஆஃப் எளிது

டேக் ஆஃப் எளிது

குறைந்த தூரத்திலேயே இந்த பறக்கும் காரை டேக் ஆஃப் செய்ய முடியும்.

பார்க்கிங் இடம்

பார்க்கிங் இடம்

ஒரு லிமோசின் காரை நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் இடம் இருந்தால் இதனை நிறுத்திவிடலாம்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த கார் இருவர் பயணிக்கும் வசதி கொண்டதாக இருக்கும். இது பாதி தானியங்கி முறையில் செயல்படும் மாடல்

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை முழுவதுமாக பெட்ரோல் நிரப்பினால் 700 கிமீ தூரம் வரை பறக்கும்.

சாதாரண பெட்ரோல்

சாதாரண பெட்ரோல்

இதற்கு விமான பெட்ரோல் தேவையில்லை. வாகனங்களுக்கு நிரப்பப்படும் சாதாரண பெட்ரோலிலேயே இயங்கும்.

பாதுகாப்பு வசதி

பாதுகாப்பு வசதி

ஓட்டுபவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், பாரசூட் உதவியுடன் தானியங்கி முறையில் தரையிறங்கும் தொழில்நுட்பம் உள்ளது.

எரிபொருள் செலவு

எரிபொருள் செலவு

ஒரு மணிநேரம் பறப்பதற்கு 15 லிட்டர் பெட்ரோல் செலவாகும்.

பிரச்னை

பிரச்னை

அதிக அளவில் பறக்கும் கார்களை உற்பத்தி செய்வதற்கு வான் போக்குவரத்தில் இருக்கும் சிக்கல்களும், விதிமுறைகளையும் தடைக்கற்களாக இருப்பதாக ஏரோமொபில் தெரிவிக்கிறது.

 தானியங்கி பறக்கும் கார்

தானியங்கி பறக்கும் கார்

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 2 சீட்டர் ஏரோமொபில் பறக்கும் கார் செமி ஆட்டோமேட்டிக் கார். ஆனால், முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும் 4 பேர் பயணிக்கும் வசதி கொண்ட காரை தயாரிக்கவும் ஏரோமொபில் திட்டமிட்டுள்ளது.

கனவு நனவாகுமா?

கனவு நனவாகுமா?

எந்தவொரு தயாரிப்பும் முதல்கட்டத்தில் அது செல்வந்தர்களுக்கானதாகவே இருக்கும். ஆனால், அது அதிக அளவில் உற்பத்தி செய்யும்போதும், சந்தைப் போட்டியும் சாமானியர்களுக்கும் அதனை சாத்தியப்படுத்தும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.

Most Read Articles
English summary
Czech-built two-seater flying car Aeromobil, which can take flight from any clear road could go on sale as early as 2017, potentially changing personal transport on a global scale, its manufacturers say.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X