ரகசியமாய்... புதிய எலக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்கும் ஆப்பிள்?!

ஐபோன், ஐபாட், கம்ப்யூட்டர்கள் மூலம் வாடிக்கையாளர்களின் நெஞ்சில் சிம்மாசனம் போட்ட ஆப்பிள் நிறுவனம், தற்போது ஆட்டோமொபைல் துறை பக்கம் தனது கவனத்தை திருப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய எலக்ட்ரிக் வாகனம் ஒன்றை அந்த நிறுவனம் ரகசியமாக உருவாக்கி வருவதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எலக்ட்ரிக் மினி வேன்

எலக்ட்ரிக் மினி வேன்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் வாகனம் மினி வேன் பாடி ஸ்டைல் கொண்டதாக இருக்கும் என்று ஒரு செய்தி கூறுகிறது. ஆனால், அது எலக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என்பது மற்றொரு தகவல். இதுவரை உறுதியானத் தகவல் இல்லை. எனவே, கலிஃபோர்னியாவில் அமைக்கப்படும் ஆப்பிளின் ரகசிய ஆராய்ச்சி மையத்தின் மீதே ஊடகங்கள் கண் வைத்து காத்திருக்கின்றன.

 எஞ்சினியர்களுக்கு வலை

எஞ்சினியர்களுக்கு வலை

இந்த புதிய எலக்ட்ரிக் வாகனத்தை தயாரிப்பதற்காக, அமெரிக்காவின் டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் எஞ்சினியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வலை வீசியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீக்ரெட் லேப்

சீக்ரெட் லேப்

இந்த புதிய எலக்ட்ரிக் வாகனத்தை உருவாக்குவதற்காக, கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிளின் ரகசிய ஆராய்ச்சி மையத்தில் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக, சில கட்டுமான நிறுவன அதிகாரிகளுடன், ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

றெக்கைக்கட்டிய செய்திகள்

றெக்கைக்கட்டிய செய்திகள்

இந்த புதிய எலக்ட்ரிக் வாகனத்தை எத்தனை ஆண்டுகளில் உருவாக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது என்பது குறித்தும் சரியானத் தகவல்கள் இல்லை. தற்போது எல்லாம் யூக அடிப்படையிலான செய்தியாகவே இருந்து வருகிறது.

தானியங்கி கார்

தானியங்கி கார்

இணைய உலகின் அரசனாக திகழும் கூகுள் நிறுவனம் டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி காரை உருவாக்கி வருவது போன்றே, மொபைல் உலகின் அரசனான ஆப்பிள் நிறுவனமும் தானியங்கி கார் மாடலை உருவாக்கி வருவதாக வெளியாகியுள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு திட்டம்

ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு திட்டம்

ஐ- காரை உருவாக்க வேண்டும் என்பது மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் கனவு திட்டம். அது தற்போது உருப்பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Apple Inc. is now planning on entering the electric vehicle segment. It is rumoured that the company has developed a prototype that looks like a minivan. It is also been reported that Apple has formed a secret lab for their project.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X