அட்டகாசமான புதிய ஆஃப்ரோடு வாகனத்தை அறிமுகப்படுத்திய ஏரியல்!

By Saravana

வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களை வடிவமைத்து உலகின் கவனத்தை ஈர்த்த ஏரியல் நிறுவனம், புதிய ஆஃப்ரோடு வாகனம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

பார்த்தவுடனே இது ஏரியல் தயாரிப்புதான் என்று கூறிவிடும் அளவுக்கு இதன் டிசைன் அமைந்திருக்கிறது. நோமட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய வாகனம் பக்கி ஸ்டைலிலான சிங்கிள் சீட்டர் ஆஃப்ரோடு மாடல். இந்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த வாகனத்தின் படங்கள், சிறப்பம்சங்கள் போன்றவற்றை ஸ்லைடரில் காணலாம்.


டிசைன்

டிசைன்

ஏரியல் ஆட்டம் காரின் அடிப்படையிலேயே இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆட்டம் காரின் பெரும்பாலான டிசைன் தாத்பரியங்கள் பளிச்சிடுகின்றன. மேலும், அதிவேக ஆஃப்ரோடு சாகசங்களை எளிதாக தாக்குப்பிடிக்கும் வகையில், மிகவும் வலுவான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டாவின் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 235 பிஎச்பி பவரையும், 300என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

வலுவான சஸ்பென்ஷன்

வலுவான சஸ்பென்ஷன்

எந்தவொரு கரடுமுரடான சாலைகளையும் எளிதாக சமாளிப்பதற்காக, மிக வலுவான சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் டிக் வெல்டு விஷ்போன் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர்த்து பில்ஸ்டெயின் நிறுவனத்தின் டேம்பர்களும், ஐபக் நிறுவனத்திடமிருந்து காயில் ஸ்பிரிங்குகளும் சப்ளை பெற்று பொருத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்

இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்

இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எஞ்சின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். மேலும், ஆஃப்ரோடின்போது சேறு, சகதிகள் உட்புறத்தில் வந்தாலும் எளிதாக சுத்தம் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கு வைப்பருடன் கூடிய வைன்ட்ஷீல்டையும் கூடுதல் ஆக்சஸெரீயாக பெறலாம்.

விலை

விலை

ரூ.26 லட்சம் விலை மதிப்பில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலை ஏரியல் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருமா என்பது குறித்து தகவல் இல்லை.

Most Read Articles
English summary

 Ariel has now produced a new vehicle that joins their line-up. The company has christened their new vehicle as the ‘Nomad'. It is based on their existing model the Atom, which is a single seater track focussed machine.
Story first published: Friday, January 9, 2015, 10:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X