அஸ்டன் மார்ட்டின் லகோண்டா... அதிர்ஷ்டசாலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

By Saravana

ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சி தர இருக்கும் அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் புதிய லகோண்டா டாரஃப் சூப்பர் செடான் கார் மாடல் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஐரோப்பா மற்றும் தென் ஆப்ரிக்காவிலும் அஸ்டன் மார்ட்டின் லகோண்டா டாரஃப் கார் விற்பனைக்கு கிடைக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது அந்த காரை வாங்க தவம் கிடக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 லிமிடேட் எடிசன் மாடல்

லிமிடேட் எடிசன் மாடல்

ஐரோப்பிய நாடுகள் மற்றும் தென் ஆப்ரிக்காவிற்காக மொத்தம் 200 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்ட உள்ளன.

 பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

வடிவமைப்பில் மிக அசத்தலான இந்த அஸ்டன் மார்ட்டின் கார், அந்த நிறுவனத்தின் ரேபிட் காரின் அடிப்படையில் VH பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிக அளவில் கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

வலது புற ஸ்டீயரிங் வீல்

வலது புற ஸ்டீயரிங் வீல்

இங்கிலாந்தில் வலது பக்க ஸ்டீயரிங் வீல் கொண்டதாகவும், மற்ற நாடுகளில் இடது பக்க ஸ்டீயரிங் வீல் கொண்டதாகவும் விற்பனைக்கு செல்கிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இந்த காரை கஸ்டமைஸ் செய்து வாங்க முடியும்.

உற்பத்தி

உற்பத்தி

இங்கிலாந்தின் வார்விக்ஷயரின் கேடான் அமைந்திருக்கும் அஸ்டன் மார்ட்டினின் பிரத்யேக கார் உற்பத்தி மையத்தில்தான் இந்த கார் தயாரிக்கப்படும். இந்த மையத்தில்தான் அஸ்டன் மார்ட்டின் வி12 ஸகாட்டோ, ஒன்- 77 கார்கள் தயாரிக்கப்பட்டன. மேலும், விரைவில் அறிமுகமாக இருக்கும் வல்கன் சூப்பர் காரும் இங்குதான் தயாரிக்கப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த சூப்பர் செடான் காரை அதிசக்திவாய்ந்த எஞ்சின் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் 4 லட்சம் பவுண்ட் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் இந்த கார் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Aston Martin has confirmed production of the Lagonda Taraf for European and South African markets. The luxury sedan, which was initially destined for only Middle Eastern markets, will now be available in right-hand drive in the UK. Only a very exclusive set of buyers will be able to own an example of the stunning Lagonda Taraf, with production restricted to a tiny run of 200 units for Europe and South Africa.
Story first published: Tuesday, March 3, 2015, 11:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X