885 கிமீ தூர பயணத்தை துவங்கிய ஆடியின் புதிய 'தானியங்கி' கார்!

By Saravana

ஆடி கார் நிறுவனத்தின் புதிய தானியங்கி கார் பரீச்சார்த்த முறையில் 885 கிமீ தூரத்திற்கு சோதனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் மின்னணு நுகர்வோர் கண்காட்சியில் ஆடியின் இந்த புதிய தானியங்கி கார் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதனை வித்தியாச முறையில் அறிமுகம் செய்யும் விதத்தில், தனது தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உலகுக்கு பரைசாற்றும் வகையிலும் புதிய முயற்சியை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து லாஸ் வேகாஸ் நகருக்கு இடையிலான 885 கிமீ தூரத்திற்கு இந்த புதிய தானியங்கி கார் பயணித்து சிஇஎஸ் கண்காட்சி நடைபெறும் அரங்கிற்கு வருகை தர இருக்கிறது.


மாடல்

மாடல்

ஆடி ஏ7 மாடலில்தான் இந்த புதிய தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.

தானியங்கி தொழில்நுட்பம்

தானியங்கி தொழில்நுட்பம்

டிரைவரில்லாமல் இயங்கும் இந்த புதிய தானியங்கி கார் தொழில்நுட்பத்தை Piloted Driving என்று ஆடி கார் நிறுவனம் குறிப்பிடுகிறது. தற்போது சோதனையில் இருக்கும் ஆடி ஏ7 தானியங்கி கார் டிரைவரின் கண்காணிப்பில், தானியங்கி முறையில் இயக்கப்படுகிறது.

கருவிகள்

கருவிகள்

ஆடி ஏ7 காரில் 5 ரேடார்கள், லேசர் ஸ்கேனர், 3டி கேமராக்கள் காரை சுற்றிலும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் கம்ப்யூட்டர் உதவியுடன் கட்டுப்படுத்தப்படும்.

வேகம்

வேகம்

அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகம் வரை தானியங்கி நுட்பத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும் என்றும், தடம் மாறுதல் மற்றும் முன்னால் செல்லும் வாகனங்களை ஓவர்டேக் செய்வது போன்றவற்றை தானியங்கி முறையில் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

நகரத்திற்கு ஒவ்வாது

நகரத்திற்கு ஒவ்வாது

இந்த புதிய காரை நெடுஞ்சாலைகளில் மட்டுமே டிரைவரில்லாமல் தானியங்கி தொழில்நுட்பத்தில் இயக்க முடியும் என்றும், நகர்ப்புறத்தில் இயக்க இயலாது என்றும் ஆடி தெரிவித்துள்ளது. மேலும், நகர எல்லையை தொடும்போது, டிரைவரை எச்சரிக்கும் வசதியும் உள்ளது. அதன் பின்னர் சாதாரணமாக டிரைவர் கட்டுப்பாட்டில் செலுத்த முடியும். ஒருவேளை டிரைவர் காரை கட்டுப்பாட்டில் எடுக்கவில்லை எனில் காரை சாலையோரம் நிறுத்தி, ஹசார்டு விளக்குகளை ஒளிரச் செய்யும் என்றும் ஆடி தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியில் எப்போது இந்த தானியங்கி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து ஆடி தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.

Most Read Articles
English summary
Audi’s decision to let an A7 Sportback drive itself across more than 885Kms of highway from San Francisco to Las Vegas for this year’s CES 2015 show. 
Story first published: Tuesday, January 6, 2015, 17:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X