2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 1 சீரிஸ் செடானை களமிறக்கும் பிஎம்டபிள்யூ!

By Saravana

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மாடலை பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் 1 சீரிஸ் சொகுசு ஹேட்ச்பேக் காரின் செடான் மாடலாக இது அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஆடி, பென்ஸ் நிறுவனங்களால் முதலிடத்திலிருந்து மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டு விட்ட பிஎம்டபிள்யூ, மீண்டும் முதலிடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருகிறது. ஆனால், ஆடி, பென்ஸ் நிறுவனங்கள் அதைவிட நாலு கால் பாய்ச்சலில் புதிய மாடல்களை களமிறக்கி வருகின்றன.

BMW 1 Series

கொஞ்சம் தாமதமாக சுதாரித்துக் கொண்டுள்ள பிஎம்டபிள்யூ தற்போது 1 சீரிஸ் காரின் அடிப்படையிலான புதிய ஆரம்ப ரக சொகுசு செடான் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன்மூலம், சொகுசு கார் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க அளவு விற்பனை வளர்ச்சியை உயர்த்த முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

புதிய 1 சீரிஸ் செடான் காரின் வடிவமைப்பில் சிறிய வித்தியாசங்கள் இருக்கும். முகப்பு கிட்னி கிரில் டிசைனில் சிறிய மாற்றங்களுடன் செடான் வெர்ஷன் வர இருப்பதாக கூறப்படுகிறது. ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் டிசைனிலும் மாற்றங்கள் இருக்கும்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக இந்த புதிய பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் செடான் காரை பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவிலேயே நாம் பார்த்துவிட முடியும். இது குறைவான விலை கொண்ட பிஎம்டபிள்யூ சொகுசு செடான் கார் என்பதால் சொகுசு கார் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இப்போதே ஆவலை கிளப்பியுள்ளது.

Most Read Articles
English summary
German luxury car manufacturer, BMW currently offers its 1 Series hatchback in India. They are most likely to replace it with a sedan version, which will be revealed at 2016 Auto Expo.
Story first published: Saturday, March 21, 2015, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X