புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே மாடல் இந்தியாவில் அறிமுகமானது - விபரம்!

By Saravana

வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள், கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே சொகுசு கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

டெல்லியில், நடந்து வரும் 2015 பிரைடல் பேஷன் வீக் விழாவில் இந்த புதிய கார் மாடலை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே காரைப் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவம்

வடிவம்

5,007மிமீ நீளம், 1,894மிமீ அகலம், 1,392மிமீ உயரம் கொண்ட இந்த கார் மிக நேர்த்தியான வடிவமைப்பு மூலமாக கண்களை கவர்கிறது.

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ கிட்னி க்ரில் அமைப்பு, எல்இடி மல்டி பீம் விளக்குகள், சிறப்பான ஏரோடைனமிக்ஸ் வழங்கும் டிசைனிலான பின்புறத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள், புதிய பம்பர் மற்றும் எல்இடி பனிவிளக்குகளுடன் மாற்றங்கள் கண்டிருக்கிறது. இன்டிரியரில் அதிக மாற்றங்கள் இல்லை. ஆனால், இரட்டை வண்ணத்தில் மிளிர்கிறது. ஹெட் அப் டிஸ்ப்ளே திரையும் உண்டு.

 எஞ்சின்

எஞ்சின்

முந்தைய மாடலில் இருந்த அதே டீசல் எஞ்சின் ஆப்ஷன்தான். அதிகபட்சம் 313 பிஎச்பி பவரையும், 630 என்எம் டார்க்கையும் வழங்கும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

செயல்திறன்

செயல்திறன்

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டும். மணிக்கு அதிகபட்சமாக 250 கிமீ வேகம் வரை செல்லும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

விலை

விலை

இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த காரின் Eminence வேரியண்ட் ரூ.1.14 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும், Design Pure என்ற வேரியண்ட் ரூ.1.21 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய சிஎல்எஸ்250 சிடிஐ மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
BMW has launched the facelifted model of the 6 Series Gran Coupe in India today. This new 6 Series Gran Coupe from BMW will take on its fellow rivals Audi A7 and Mercedes Benz CLS coupe.
Story first published: Friday, May 29, 2015, 15:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X