பிஎம்டபுள்யூவின் அனைத்து கார்களின் மீதும், 3% விலை ஏற்றம் - விரிவான தகவல்கள்

By Ravichandran

பிஎம்டபுள்யூ இந்தியா தங்களின் அனைத்து கார் மாடல்களின் விலைகளையும், 3% உயர்த்த உள்ளது.

ஜனவரி 1, 2016-ஆம் தேதி அல்லது அதற்கு பின் பிஎம்டபுள்யூ கார்களை வாங்கினால், இந்த விலை உயர்வு மாற்றம் உணரப்படும். பிஎம்டபுள்யூ மற்றும்

மினி கார்களின் மீதான இந்த விலை உயர்வு, இந்தியா முழுவதும் ஜனவரி 1, 2016-ஆம் தேதி அமலுக்கு வர உள்ளது.

விலை உயர்வுக்கான காரணம்;

விலை உயர்வுக்கான காரணம்;

பிஎம்டபுள்யூ இந்தியா அதன் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான தயாரிப்புகளை வழங்க உத்தேசித்து வருகிறது.

பிஎம்டபிள்யூ வாகன உரிமைத்துவத்திற்கு அதிக மதிப்பு வழங்கும் நோக்கத்தில் உள்ளது. பிஎம்டபிள்யூவின் ‘ஷீர் டிரைவிங் ப்ளஷெர்', பிரிமியம் மதிப்பீடுகளை ஈர்க்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

உயர்தர வாடிக்கையாளர் சேவை;

உயர்தர வாடிக்கையாளர் சேவை;

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பிஎம்டபுள்யூ ஷோரூம்களும் சர்வதேச தரத்தை பின்பற்றுகின்றன.

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உயர்ரக சேவையை வழங்கும் படி, பிஎம்டபிள்யூ அதன் ஊழியர்களை பணித்துள்ளது. மேலும்

வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் மற்றும் சொகுசான அனுபவத்தை வழங்குவதையே பிஎம்டபிள்யூ, உயர்ந்த முன்னுரிமையாக கொண்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கபடும் பிஎம்டபிள்யூ கார்களின் விலை;

இந்தியாவில் தயாரிக்கபடும் பிஎம்டபிள்யூ கார்களின் விலை;

தற்போது, இந்தியாவில் தயாரிக்கபடும் பிஎம்டபிள்யூ கார்களின் விலை விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். இது, 3% விலை ஏற்றதிற்கு

முந்தைய விலை என்பது குறிப்பிடதக்கது.

பிஎம்டபிள்யூ 1 சீரீஸ் - 26.50 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் - 34.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் கிரான் டூரிஸ்மோ - 39.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் - 44.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் - 1.07 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 - 37.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 - 46.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 - 65.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

சிபியூ-வாக விற்கபடும் கார்கள்;

சிபியூ-வாக விற்கபடும் கார்கள்;

சிபியூ அல்லது கம்ப்லீட்லி பில்ட் யூனிட்கள் எனப்படும் முழுவதுமாக தயாரித்து முடிக்கபட்ட கார்களும் இந்தியாவில் ஏராளமாக விற்கபடுகிறது.

பிஎம்டபிள்யூவின் சிபியூ-வாக விற்கப்படும் கார்களின் விலை விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். இது, 3% விலை ஏற்றதிற்கு முந்தைய விலை என்பது குறிப்பிடதக்கது.

பிஎம்டபிள்யூ 6 சீரீஸ் கிரான் கூபே - 1.10 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 - 1.15 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ இசட்4 - 72.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ எம்3 செடான் - 1.17 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ எம்4 கூபே - 1.19 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ எம்5 செடான் - 1.30 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ எம்6 கிரான் கூபே - 1.71 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ எக்ஸ்5எம் - 1.55 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ எக்ஸ்6எம் - 1.60 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ ஐ8 - 2.29 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

மினி கார்களின் விலை விவரங்கள்;

மினி கார்களின் விலை விவரங்கள்;

இந்திய வாகன சந்தையில் 4 கார்கள், மினி பிராண்ட் சார்பாக வழங்கபடுகிறது.

மினி கார்களின் விலை விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். இது, 3% விலை ஏற்றதிற்கு முந்தைய விலை என்பது குறிப்பிடதக்கது.

மினி 3-டோர்கள் - 28.50 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

மினி 5-டோர்கள் - 31.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

மினி கன்வர்டிபிள் - 33.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

மினி கண்ட்ரிமேன் - 36.50 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ டீலர்ஷிப்கள்;

பிஎம்டபிள்யூ டீலர்ஷிப்கள்;

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும், தற்போதைய நிலையில் இந்தியா முழுவதும், 39 டீலர்ஷிப்கள் உள்ளன.

இந்த டீலர்ஷிப்கள், முக்கிய சந்தைகள் மற்றும் நகரங்களில் பரவியுள்ளது.

வாடியாளர்களின் எதிர்வினைகள்;

வாடியாளர்களின் எதிர்வினைகள்;

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக, திட்டமிடபட்டுள்ள இந்த 3% விலை உயர்வுக்கு, வாடிக்கையாளர்களிடம் இருந்து எப்படிபட்ட எதிர்வினைகள் இருக்கும் என்று இப்போதைய நிலையில் யூகிக்க முடியாத விஷயமாக உள்ளது.

யோசனை;

யோசனை;

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், வரும் ஜனவரி 1, 2015-ஆம் தேதிக்குள் வாங்க திட்டமிடுதல் நல்லது.

இப்படி செய்வதினால், நீங்கள் கடின உழைப்பு மூலம் சம்பாதித்த பணத்தை, குறிப்பிடதக்க அளவில் சேமிக்கலாம்.

Most Read Articles
English summary
BMW India Hikes Price Of all its Models By 3 Percent From 2016 in India. BMW and MINI models are to witness price hike of three percent from 1st January 2016 on-wards. This Price Hike will be uniformly implemented across all the Dealerships throughout India.
Story first published: Saturday, November 28, 2015, 21:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X