பிஎம்டபிள்யூவின் புதிய 'ஸ்மார்ட்' லேசர் ஹெட்லைட்!

அமெரிக்காவில் நடைபெற இருக்கும் சிஇஎஸ் கண்காட்சியில் புதிய லேசர் ஹெட்லைட்டை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்ய உள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரில் ஏற்கனவே லேசர் ஹெட்லைட் ஆப்ஷனல் ஆக்சஸெரீயாக வழங்கப்படுகிறது. ஆனால், புதிய லேசர் ஹெட்லைட் சிஸ்டம் கம்ப்யூட்டர் மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

BMW New Laser Headlights

எதிரில் வரும் வாகனங்களை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப பிரகாசத்தை தானியங்கி முறையில், கூட்டிக் குறைக்கும். லேசர் ஹெட்லைட் அதிக தீங்கு தரக்கூடிய ஒளிக்கற்றைகளை உமிழ்வதால், அமெரிக்க சாலை பாதுகாப்பு மேம்பாட்டு ஆணையம் இந்த ஹெட்லைட்டுக்கு இதுவரை அனுமதி தரவில்லை.

லேசர் ஹெட்டிலிருந்து வெளியாகும் தீங்கு தரும் ஒளிக்கற்றைகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய தடுப்பு வசதியுடன் இந்த புதிய லேசர் ஹெட்லைட் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஇஎஸ் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கான்செப்ட் கார் மாடலில் இந்த புதிய ஸ்மார்ட் லேசர் ஹெட்லைட் தொழில்நுட்பத்தை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்ய இருக்கிறது.

காரில் இருக்கும் கேமராக்கள், சென்சார்கள் மற்றும் டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்பங்களுடன் இந்த புதிய லேசர் ஹெட்லைட் இணைந்து செயல்படும். இதுதவிர, ஓஇஎல்டி டெயில்லைட் சிஸ்டமும் இந்த கான்செப்ட் கார் மூலம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
BMW will be lighting up CES 2015 with the help of smart lasers and OLED technology. The company plans to debut a new prototype that utilizes both smart laser headlights and OLED tail lights.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X