மீண்டும் கைகோர்த்த பிஎம்டபிள்யூ - டொயோட்டா... இந்த முறை புதிய ஹேட்ச்பேக் கார்!

By Saravana

மினி பிராண்டில் புதிய சின்ன காரை உருவாக்க பிஎம்டபிள்யூ மற்றும் டொயோட்டா கார் நிறுவனங்கள் மீண்டும் கைகோர்த்துள்ளன.

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த டொயோட்டா கார் நிறுவனமும் கடந்த காலங்களில் பல்வேறு கார் திட்டங்களில் தொழில்நுட்பம் மற்றும் எஞ்சின் ஆகியவற்றை பகிர்ந்துகொண்டுள்ளன.

Mini Car 1

இதேபோன்று, மற்றொரு புதிய கார் திட்டத்தை இந்த இரு நிறுவனங்களும் இணைந்து கையிலெடுத்துள்ளன. பிஎம்டபிள்யூ கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த மினி பிராண்டில் புதிய சின்ன கார் ஒன்றை தயாரிப்பதற்காக மீண்டும் கைகோர்த்துள்ளன.

மைனர்(Minor) என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய கார் வடிவமைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் வடிவம், எஞ்சின் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை.

Mini 2

ஆனால், வாகன கண்காட்சியில் ஏற்கனவே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மினி பிராண்டின் ராக்கெட்மேன் கான்செப்ட் மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா அய்கோ ஆகிய கார்களின் அடிப்படையில் இந்த புதிய கார் உருவாக்கப்படலாம் என்பது அனுமானிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

Most Read Articles
English summary

 German luxury car manufacturer, BMW and Japanese automobile giant, Toyota will be coming together to work on a new project. These two automobile manufacturers will work together on developing an all new entry-level hatchback.
Story first published: Saturday, January 24, 2015, 9:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X