புதிய செவர்லே க்ரூஸ் காரின் படங்கள், தகவல்கள் வெளியானது!

By Saravana

பெர்ஃபார்மென்ஸ் செடான் கார் விரும்பிகளின் முதல் சாய்ஸாக இருந்து வரும் செவர்லே க்ரூஸ் இப்போது புதிய தலைமுறை மாடலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுவரை பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் இருந்த செவர்லே க்ரூஸ் இப்போது புத்தம் புதிய டிசைன் தாத்பரியத்தில் மாற்றப்பட்டுள்ளது. வசதிகளிலும், டிசைனிலும் முற்றிலும் புதிய மாடலாக வருகை தரும் புதிய செவர்லே க்ரூஸ் கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

விற்பனை

விற்பனை

இதுவரை உலக அளவில் 3.5 மில்லியன் செவர்லே க்ரூஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், புத்தம் புதிய மாடலாக செவர்லே க்ரூஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட 3 இன்ச் கூடுதல் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எடையும் 113 கிலோ குறைந்துல்ளது. லெக்ரூம் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், கையாளுமையில் மிக துல்லியமாக இருக்கும் விதத்தில் புதிய மாடலை வடிவமைத்துள்ளனர்.

 முகப்பு டிசைன்

முகப்பு டிசைன்

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டிசைன் கொள்கையின் அடிப்படையில் இந்த காரை உருவாக்கியிருக்கின்றனர். முகப்பில் எல்இடி பகல்நேர விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், அத்துடன் க்ரில் அமைப்பும் சேர்ந்து காட்சி தருவது மிரட்டலாக இருக்கிறது. பிரிமியம் ஃபீலை தருவதற்காக க்ரோம் அலங்காரமும் அதிகம் தெரிகிறது.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

முறுக்கலான பாடி லைன்கள், பின்பக்கம் தாழ்ந்து போகும் கூரை அமைப்பு ஆகியவை இதன் பக்கவாட்டில் கவரும் விஷயங்கள். கணணாடி ஜன்னலை சுற்றி க்ரோம் கம்பி போன்றவை சிறப்பான தோற்றத்தை தருகிறது.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பம்பர் டிசைன் மிகவும் கம்பீரமாக தெரிவதுடன், டெயில் லைட் க்ளஸ்ட்டரும் கவர்ச்சியாக இருக்கிறது. மொத்தத்தில் புதிய க்ரூஸ் தனது வாடிக்கையாளர் வட்டத்தை அதிகரித்துக் கொள்ளும் என்று நம்பலாம்.

இன்டிரியர்

இன்டிரியர்

உட்புறம் முழுவதும் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் கூகுள் ஆன்ட்ராய்டு ஆட்டோ போன்ற புதிய தொழில்நுட்பங்களை இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சப்போர்ட் செய்யும். இதனால், நவீன தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த மாடலாக வெளிவருகிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

புதிய செவர்லே க்ரூஸ் காரில் அதிகபட்சம் 113 எச்பி பவரை அளிக்கம் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 153 எச்பி பவரை வழங்கக்கூடிய 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் வெளியிடப்பட உள்ளது. இந்த மாடல் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். ஸ்டாப் ஸ்டார்ட் சிஸ்டமும் நிரந்தர தொழில்நுட்ப அம்சமாக இடம்பெற்றிருக்கும். முதல்முறையாக ஐரோப்பிய மார்க்கெட்டில் 1.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் மாடலையும் அறிமுகம் செய்ய செவர்லே திட்டமிட்டிருக்கிறது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், டீசல் மாடல் 2017ல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Chevrolet Cruze is a popular sedan in several countries and has not received any major change, since its launch. The manufacturer has now provided an all-new design language for 2016.
Story first published: Friday, June 26, 2015, 11:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X