டட்சன் கோ காருக்கான வடிவமைப்பு போட்டி... உங்களை கவர்ந்த டிசைன் எது?!

By Saravana

இந்தோனேஷியாவில் டட்சன் கோ காருக்கு டிசைன் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. டட்சன் கோ எக்ஸ்ப்ளோர் என்ற பெயரிலான இந்த டிசைன் போட்டியில் ஏராளமான டிசைன் நிபுணர்கள் மற்றும் வடிவமைப்பு கலையில் ஆர்வமுள்ளவர்கள் பங்கு கொண்டு தங்களது எண்ணங்களில் டட்சன் கோ காரை உருமாற்றி அசத்தியிருக்கின்றனர்.

ராலி ரேஸ் ஸ்டைல், கஸ்டமைஸ் மாடல் என டிசைனர்கள் உருவாக்கி வெளியிட்டிருக்கும் படங்கள் டட்சன் கோ காருக்கு மிகப்பெரிய வலுசேர்க்கிறது. கிராஷ் டெஸ்ட்டால் உடைந்த டட்சன் கோ காரின் இமேஜை இந்த படங்கள் மாற்றுமா என்பதை ஸ்லைடருக்கு வந்து படங்களை பார்த்த பின் தெரிவிக்கலாம். என்ன டட்சன் கோ காரை காண ஆவல் பிறந்துவிட்டதா?!... ஸ்லைடருக்கு வாருங்கள்!


ஸ்பெஷல் பாடி கிட்

ஸ்பெஷல் பாடி கிட்

ஸ்பெஷல் பாடி கிட் மூலம் ரேஸ் கார் தோற்றத்திற்கு மாறியிருக்கும் டட்சன் கோ கார். மிக நாகரீகமாக இதனை வடிவமைத்துள்ளார் இதன் டிசைனர். முன்புற, பின்புற பம்பரின் டிசைனில் மாறுதல் மற்றும் ஸ்பாய்லர் கொடுத்து மூலம் காரை மிக கவர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றியிருக்கிறார்.

இது ஸ்விஃப்ட் இல்ல...

இது ஸ்விஃப்ட் இல்ல...

எக்ஸ்மேன் என்ற சூப்பர்மேன் ஹாலிவுட் சினிமா கதாபாத்திரத்தின் ஸ்டைலில் இதன் பனிவிளக்குகள் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டிக்கர் வேலைப்பாட்டுடன், ஹெட்லைட், பம்பர் டிசைனை மிக அருமையாக செதுக்கியுள்ளார் இதன் டிசைனர். பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது சட்டென ஸ்விஃப்ட் சாயல் தெரிகிறது.

எல்இடி ஜாலம்

எல்இடி ஜாலம்

அலாய் வீல்கள், விளக்கொளி மற்றும் ஸ்டிக்கர் வேலைப்பாடு கொடுத்து டட்சன் கோ காருக்கு புதிய டிசைன் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓவியரின் கைவண்ணம்

ஓவியரின் கைவண்ணம்

டட்சன் கோ காரை ஓவியம் மூலம் புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ்'கார்' அவதாரம்

போலீஸ்'கார்' அவதாரம்

இந்தோனேஷிய போலீஸ் கார் ஸ்டைலில் மாற்றப்பட்டிருப்பதை காணலாம். போலீஸ் ஸ்டிக்கர் தவிர்த்து, பம்பர் டிசைனும் அசத்தல்.

ராலி ரேஸ் ஸ்டைல்

ராலி ரேஸ் ஸ்டைல்

ராலி ரேஸ் ஸ்டைலில் மாற்றப்பட்டிருக்கும் டட்சன் கோ கார். மிக அசத்தலாக இருக்கிறதல்லவா?

ஐரோப்பிய டிசைன் சாயல்

ஐரோப்பிய டிசைன் சாயல்

ஐரோப்பிய பொறியாளர்கள் இந்த காரை வடிவமைத்திருந்தால் எப்படியிருக்கும் என்பதை தெரிவிக்கும் வகையிலான ஹெட்லைட், ஏர்டேம், மஞ்சள் நிறம் கொடுக்கப்பட்ட அலாய் வீல்கள் என இந்த ஸ்பெஷல் பாடி கிட் மாடலும் சிறப்பாகவே இருக்கிறது.

 ஸ்போர்ட்ஸ் மாடல்

ஸ்போர்ட்ஸ் மாடல்

ஸ்போர்ட்ஸ் கார் மாடல் போன்று மாறியிருக்கும் டட்சன் கோ. பானட் இன்டேக், பம்பர், 4 சைலென்சர் குழாய்கள், மிருகத்தனமான தோற்றத்தை தரும் பம்பர் என ஒரு ராட்சதனாகவே மாறியிருக்கும் டட்சன் கோ.

ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் மேன் ஸ்டைலில் மாறியிருக்கும் டட்சன் கோ.

கஸ்டமைஸ் மாடல்

கஸ்டமைஸ் மாடல்

புரொஜெக்டர் ஹெட்லைட், அலாய் வீல்கள், அனலை கக்கும் வண்ணம், பின்புறத்தில் பெரிய ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டு காட்சி தரும் டட்சன் கோ. உங்களுக்கு எந்த மாடல் பிடித்திருக்கிறது. கருத்துப் பெட்டியில் பகிர்ந்துகொள்ளலாம்.

Most Read Articles
English summary

 Datsun Indonesia has started a campaign for its GO hatchback. The campaign named as Datsun GO Xplore Your Style - which is a design competition. Take a look at some awesome designs submitted by few designers. 
Story first published: Thursday, January 22, 2015, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X