புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!!

By Saravana

குஜராத்தில், நேற்று நடந்த புதிய ஃபோர்டு கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அந்நிறுவனத்தின் ஆஸ்பயர் என்ற புதிய காம்பேக்ட் செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டது.

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் பற்றிய 10 முக்கியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. அறிமுகம்

01. அறிமுகம்

குஜராத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஃபோர்டு கார் ஆலையின் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த ஃபோர்டு தலைமை செயல் அதிகாரி மார்க் ஃபீல்ட்ஸ் இந்த புதிய ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்தார்.

02. அடக்கமான வகை செடான் கார்

02. அடக்கமான வகை செடான் கார்

புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ காரின் அடிப்படையிலான 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும் அடக்கமான செடான் வகை கார் மாடல் இது.

03. எஞ்சின் ஆப்ஷன்கள்

03. எஞ்சின் ஆப்ஷன்கள்

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்றுவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைககும். அடுத்து, டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டு வருகிறது.

04. கியர்பாக்ஸ் விபரம்

04. கியர்பாக்ஸ் விபரம்

புதிய ஆஸ்பயர் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். அடுத்ததாக, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

05. பாதுகாப்பு

05. பாதுகாப்பு

அடக்கமான செடான் கார் சந்தையில் ஃபோர்டு ஆஸ்பயர்தான் மிகச்சிறந்த பாதுகாப்பு வசதிகளை அளிக்கும் மாடலாக இருக்கும். ஓட்டுனர், சக பயணிக்கு மட்டுமின்றி, இந்த ரகத்தில் முதல்முறையாக கர்டெயின் ஏர்பேக் எனப்படும் பக்கவாட்டிலும் காற்றுப் பைகள் பொருத்தப்பட்ட மாடலாக வருகிறது.

06. அவசர உதவி நுட்பம்

06. அவசர உதவி நுட்பம்

விபத்தில் கார் சிக்கிவிட்டால் உடனடியாக அவசர உதவி மையங்களுக்கு தானியங்கி முறையில் குறுந்தகவல் அனுப்பி, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக முதல் உதவி மற்றும் மருத்துவ உதவிகளை பெறும் வசதியை அளிக்கும் தொழில்நுட்ப வசதி இந்த காரில் இடம்பெற்றிருக்கும்.

07. ஃபோர்டு ஆப்லிங்க் வசதி

07. ஃபோர்டு ஆப்லிங்க் வசதி

மொபைல்போன், பொழுதுபோக்கு மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களை வாய்மொழி உத்தரவுகள் மூலம் எளிதாக கட்டுப்படுத்தும் வசதியை அளிக்கும் ஃபோர்டு ஆப்லிங்க் வசதியுடன் இந்த கார் வருகிறது.

08. மொபைல்போன் டாக்கிங் ஸ்டேஷன்

08. மொபைல்போன் டாக்கிங் ஸ்டேஷன்

மொபைல்போன், எம்பி3 பிளேயர் மற்றும் வழிகாட்டு சாதனங்களை வைத்துக்கொள்வதற்கான மொபைல்போன் டாக்கிங் ஸ்டேஷன் வசதி இந்த காரில் இருக்கும்.

09. ஏற்றுமதி

09. ஏற்றுமதி

ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இந்த புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

[குறிப்பு: கான்செப்ட் மாடல் படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது]

10. எதிர்பார்க்கும் விலை

10. எதிர்பார்க்கும் விலை

ரூ.4.80 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான விலையில் இந்த புதிய ஆஸ்பயர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[குறிப்பு: கான்செப்ட் மாடலின் படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது]

11. எப்போது விற்பனை?

11. எப்போது விற்பனை?

வரும் ஜூன் மாதம் இந்தியாவில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The Ford Figo Aspire compact sedan was recently revealed by Ford India, and will aim to take on the Honda Amaze, Tata Zest, Maruti Swift Dzire and Hyundai Xcent from the word go. we've put together a list of what separates this new car from the rest.
Story first published: Friday, March 27, 2015, 17:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X