இந்த டெஸ்லா எலக்ட்ரிக் காருக்கும், நமக்கும் சம்பந்தம் இருக்கே...!!

By Saravana

உலகின் மிகச்சிறந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் உயர்வகை மாடல் எஸ் செடான் காரின் பெர்ஃபார்மென்ஸ், சொகுசு வசதிகள் குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருக்கிறது.

ஆனால், டெஸ்லா மாடல் எஸ் காரின் விலை மிகவும் உயரிய வகை சொகுசு கார்களுடன் போட்டி போடுவதால், பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், குறைவான விலை டெஸ்லா கார் வருகிறது. இந்தியாவிலும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கும் இந்த கார் பற்றிய தகவல்களை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ., எலான் மஸ்க் வெளியிட்டிருக்கிறார். இதுதான் இப்போது பரபரப்பான விஷயமாக இருக்கிறது.

சர்வதேச மாடல்

சர்வதேச மாடல்

அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் குறித்து வைத்து, குறைவான விலையில் புதிய எலக்ட்ரிக் செடான் கார் மாடலை டெஸ்லா களமிறக்க உள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை குறிவைத்து இந்த மாடல் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

மாடல் 3

மாடல் 3

மாடல் 3 என்ற பெயரில் இந்த புதிய செடான் கார் தயாராகிறது. விரைவில் மாடல் எக்ஸ் என்ற உயர்வகை எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை டெஸ்லா நிறுவனம் வெளியிட இருக்கிறது. அதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த மாடல் 3 கார் வெளியிடப்படுகிறது.

விலை விபரம்

விலை விபரம்

35,000 டாலர் விலையில் இந்த புதிய மாடல் 3 எலக்ட்ரிக் செடான் கார் வர இருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.23 லட்சம் விலை கொண்டதாக இருக்கும். அதேநேரத்தில், இறக்குமதி செய்து விற்பனைக்கு வரும்போது, 100 சதவீத வரி விதிப்பை பெறும் என்பதால், இந்தியாவில் விலை அதிகமாக இருக்கும். ஆனால்,...

 இந்தியாவில் அசெம்பிள்...

இந்தியாவில் அசெம்பிள்...

இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கார் அசெம்பிள் செய்வதற்கான ஆலையை திறக்கவும் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், இறக்குமதி வரி விதிப்பிலிருந்து பெரிய அளவு தப்பிக்க முடியும். இதனை டெஸ்லா நிறுவனத்தின் தகவல் பிரிவு தலைவர் ஜே விஜயனும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

விற்பனை

விற்பனை

அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டவுடன், மாடல் 3 காருக்கு முன்பதிவு துவங்கப்பட உள்ளது. அதேநேரத்தில், 2017ம் ஆண்டுதான் மாடல் 3 கார் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Tesla CEO Elon Musk has revealed some frest details of Tesla Model 3 car.
Story first published: Saturday, September 5, 2015, 8:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X