கடைசி புகாட்டி வேரான் சூப்பர் காரும் விற்பனையானது!

By Saravana

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோமொபைல் உலகில் மிக முக்கிய இடத்தை பதிவு செய்திருந்த புகாட்டி வேரான் கார் விற்பனை நிறைவு பெற்றிருக்கிறது.

இலக்கு வைக்கப்பட்ட 450 கார்களில் கடைசி காரை மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு புகாட்டி நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bugatti Veyron

இதனிடையே, அந்த கடைசி கார் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இந்த காரை La Finale என்ற பெயரில் புகாட்டி விற்பனை செய்திருக்கிறது.

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் மாடல் என்ற பெருமையை நீண்ட காலமாக தக்க வைத்திருந்த புகாட்டி வேரான் ஆட்டோமொபைல் பிரியர்கள் மத்தியில் வெகு பிரபலமான மாடலாக விளங்கியது. இந்த நிலையில், புகாட்டி வேரான் காருக்கு மாற்றாக புதிய ஹைப்பர் கார் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது புகாட்டி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Last example of 450-strong Veyron production sells after a decade, with successor due in 2016.
Story first published: Tuesday, February 24, 2015, 18:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X