ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

By Saravana

ரூ.6.79 லட்சம் ஆரம்ப விலையில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

பல நவீன தொழில்நுட்ப வசதிகள், அதிக மைலேஜ் மற்றும் கூடுதல் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டிருக்கும் டீசல் எஞ்சின் ஆப்ஷனுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல் வந்திருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய வசதிகள்

புதிய வசதிகள்

இருள் நேரங்களில் தானாக ஒளிரும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், மழை வரும்போது தானாக இயங்கும் ரெயின் சென்சிங் வைப்பர்கள், இரவு நேரத்தில் காரை நிறுத்தினாலும் சிறிது நேரம் ஒளிரும் விளக்குகள், இரவு நேரங்களில் பின்னால் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் ஓட்டுனருக்கு ஏற்படும் கண்கூச்சத்தை தவிர்க்கும் விதத்தில் எலக்ட்ரோ- க்ரோமிக் மிரர் போன்றவை புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 100 பிஎஸ் பவரை அளிக்கும் விதத்தில் மேம்படுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் லிட்டருக்கு 22.27 கிமீ மைலேஜ் தரும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது. இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. பெட்ரோல் மாடல்களில் மாற்றம் இல்லை. இந்த எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் அதிகபட்சம் 112 பிஎஸ் பவரை அளிக்கும். லிட்டருக்கு 15.85 கிமீ மைலேஜ் தரும். 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 125 பிஎஸ் பவரை அளிக்கும். லிட்டருக்கு 18.88 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய வேரியண்ட்டுகள்

புதிய வேரியண்ட்டுகள்

1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் மாடல் இதுவரை டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதைவிட குறைவான விலை கொண்ட ட்ரென்ட் ப்ளஸ் என்ற புதிய வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதேபோன்று, டீசல் மாடலிலும் ட்ரென்ட் ப்ளஸ் வேரியண்ட் சேர்க்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான மிட்வேரியண்ட்டாக இருக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. க்ரோமிய கதவு கைப்பிடிகள், க்ரோமிய வளையம் கொண்ட மீட்டர் கன்சோல் மற்றும் சில இடங்களில் குரோமிய பாகங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. பிரிமியம் லெதர் இருக்கைகளும் இன்டிரியரின் அந்தஸ்தை உயர்த்துகிறது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய கோல்டன் பிரான்ஸ், டைமன்ட் ஒயிட், பாந்தர் பிளாக், கைனெட்டிக் புளூ, மூன்டஸ்ட் சில்வர், சில் மெட்டாலிக் மற்றும் ஸ்மோக் க்ரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

பெட்ரோல் மாடல்களின் விலை விபரம்

பெட்ரோல் மாடல்களின் விலை விபரம்

1.5லி பெட்ரோல்

ஆம்பியன்ட்: ரூ.6,79,563

ட்ரென்ட்: ரூ.7,75,363

டைட்டானியம்: ரூ.8,90,963

டைட்டானியம்[ஆட்டோமேட்டிக்]: ரூ.9,93,363

1.0 லி ஈக்கோபூஸ்ட் மாடல்

ட்ரென்ட் ப்ளஸ்: ரூ.8,53,363

டைட்டானியம் ப்ளஸ்: ரூ.9,89,463

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்

 டீசல் மாடல் விலை விபரம்

டீசல் மாடல் விலை விபரம்

ஆம்பியன்ட்: ரூ.7,98,144

ட்ரென்ட்: ரூ.8,70,244

ட்ரென்ட் ப்ளஸ்: ரூ.9,18,244

டைட்டானியம்: ரூ.9,85,844

டைட்டானியம் ப்ளஸ்: ரூ.10,44,344

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்

Most Read Articles
English summary
Ford India launches New EcoSport with enhanced power, performance, appeal and features – entry level variant to start at INR 679,563 (ex-showroom Delhi)
Story first published: Wednesday, October 7, 2015, 15:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X