ஜெனிவாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 'எஸ்' மாடல் அறிமுகம் !

By Saravana

சில டிசைன் மாற்றங்கள், கூடுதல் ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பிரத்யேக மாடல் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்ட்டுள்ளது.

டிசைன் மாற்றங்கள் மட்டுமின்றி சிறப்பான கையாளுமையை வழங்கும் விதத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


ஸ்பேர் வீல் இல்லை

ஸ்பேர் வீல் இல்லை

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மாடலில் ஸ்பேர் வீல் இல்லை. ரூஃப் ரெயில்களும் நீக்கப்பட்டுள்ளன.

 ரியர் வியூ மிரர்கள்

ரியர் வியூ மிரர்கள்

ரியர் வியூ மிரர்கள் பாடி கலரில் இல்லாமல் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இந்த காரில் க்ரோம் பட்டை வளையத்துடன் கூடிய புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. சப்தத்தை குறைக்கும் விதத்திலான கூடுதல் பட்டைகள் கதவுகள் மற்றும் டேஷ்போர்டில் கொடுக்கப்பட்டுள்ளது. 4 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது.

இதர ஆக்சஸெரீகள்

இதர ஆக்சஸெரீகள்

வின்ட்டர் பேக் என்ற கூடுதல் ஆக்சஸெரீ பேக்கும் இந்த ஈக்கோஸ்போர்ட்டுடன் கிடைக்கும். இதில், ஹீட்டடு விண்ட்ஸ்கிரீன், ஹீட்டடு மிரர்கள் உள்ளன.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ஸ்கிட் பிளேட்

ஸ்கிட் பிளேட்

ஸ்கிட் பிளேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்டிரியர்

இன்டிரியர்

கருப்பு நிற இன்டிரியர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷனில் மாற்றம்

சஸ்பென்ஷனில் மாற்றம்

பின்புற சஸ்பென்ஷனில் ரியர் ட்விஸ்ட் பீம் மற்றும் ஸ்பிரிங்குகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 10 மிமீ குறைக்கப்பட்டிருப்பதால், சிறப்பான கையாளுமையை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாட்டிலைட் நேவிகேஷன், ரியர் வியூ கேமரா ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.

யூரோ 6 மாசு அம்சம்

யூரோ 6 மாசு அம்சம்

யூரோ- 6 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்டதாக இந்த ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டீசல் எஞ்சின் 5 பிஎஸ் கூடுதல் பவரை அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், கியர்பாக்ஸ் ரேஷியோவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், முதல் மற்றும் இரண்டாவது கியர்களில் கூடுதல் டார்க் கிடைக்கும்.

 புதிய பெயிண்ட்

புதிய பெயிண்ட்

இந்த எஸ்யூவி பிரத்யேக வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
American automobile giant, Ford is present all over the world. They offer a wide range of products to international markets. At the 2015 Geneva Motor Show they have taken the opportunity to showcase its EcoSport S model, which has been revealed for the first time.
Story first published: Thursday, March 5, 2015, 14:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X