இந்த மாத இறுதியில் குஜராத் ஆலையை திறக்கிறது ஃபோர்டு!

இந்த மாத இறுதியில் குஜராத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய கார் ஆலையை திறக்க ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் சென்னையில் கார் ஆலை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தக விரிவாக்கத்தின் ஒருபகுதியாக இந்தியாவில் இரண்டாவது புதிய கார் ஆலையை குஜராத்தில் அமைக்க முடிவு செய்தது.

Ford Car

தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் இருப்பதால், இந்த புதிய கார் ஆலையை இந்த மாத இறுதியிலேயே திறப்பதற்கு ஃபோர்டு கார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. குஜராத் மாநில முதல்வர் ஆனந்திபென் பட்டேல் இந்த புதிய கார் ஆலையை திறக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆண்டுக்கு 2.40 லட்சம் கார்களையும், 2.70 லட்சம் கார் எஞ்சின்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த புதிய கார் ஆலையை ஃபோர்டு நிறுவனம் அமைத்திருக்கிறது. இந்த புதிய ஆலையில், புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ மற்றும் புதிய ஃபிகோ ஆஸ்பயர் கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

Most Read Articles
English summary
American automobile giant is showcasing a lot of trust in the Indian market. Ford India is taking the ‘Make in India' campaign seriously and has decided to inaugurate its second manufacturing facility in India by the end of March, 2015.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X