புனே, அராய் மையத்தில் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி கார்!

By Saravana

அமெரிக்காவின் புகழ்பெற்ற மஸில் ரக கார் மாடலான ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியா வருவது உறுதியாகியுள்ளது. புனேயிலுள்ள, தேசிய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி மையத்தில் வைத்து தற்போது சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எனவே, இந்த புதிய மஸில் கார் இந்திய மார்க்கெட்டிலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய காரின் அருமை, பெருமைகள் சிலவற்றை ஸ்லைடரில் காணலாம்.

அமெரிக்காவின் பாரம்பரிய மாடல்

அமெரிக்காவின் பாரம்பரிய மாடல்

அமெரிக்க கார் மார்க்கெட்டின் பிரத்யேகமான ரகத்தில் விற்பனை செய்யப்படும் மாடல்தான் மஸில் கார்கள். அந்நாட்டு கார் மார்க்கெட்டின் பாரம்பரிய பெருமைக்கு இந்த மஸில் கார்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. 1964ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் பொன்விழா ஆண்டு கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதற்காக, 6ம் தலைமுறை மாடலாக புதிய ஃபோர்டு மஸ்டாங் அறிமுகம் செய்யப்பட்டது.

 வலது பக்க டிரைவிங் மாடல்

வலது பக்க டிரைவிங் மாடல்

கடந்த 50 ஆண்டுகளாக இடதுபக்க டிரைவிங் கொண்ட மாடல் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில், முதல்முறையாக வலது பக்க டிரைவிங் கொண்ட மாடலை உருவாக்கி வருவதாக ஃபோர்டு அறிவித்தது. இதன்மூலம், உலக அளவில் இந்த கார் விற்பனைக்கு செல்வது உறுதியானது. அதில், இந்திய மார்க்கெட்டும் இப்போது ஒன்றாக இருப்பது ஃபோர்டு மஸ்டாங் காரின் இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

மூன்று வித எஞ்சினுடன் கிடைக்கும் நிலையில், இந்தியாவில் தற்போது ஆய்வுப் பணிகளுக்காக வந்திருக்கும் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி மாடலில் 5.0 லிட்டர்வி8 எஞ்சின் கொண்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 435 எச்பி பவரையும், 524 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

புதிய சஸ்பென்ஷன்

புதிய சஸ்பென்ஷன்

முதல்முறையாக இந்த காரின் பின்புறத்தில் இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்ப்டடுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட மஸ்டாங் வரிசை மாடல்களில் தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்தான் மிகச்சிறப்பான கையாளுமை கொண்டதாக இருக்கும்.

பொன்விழா சின்னம்

பொன்விழா சின்னம்

மஸ்டாங் காரின் பொன்விழாவையொட்டி, ஒவ்வொரு 2015 மாடல் மஸ்டாங் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரிலும் குதிரை சின்னமும், Mustang - Since 1964 என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

அறிமுகம்

அறிமுகம்

தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த புதிய கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி

இறக்குமதி

இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில், ஃபோர்டு மஸ்டாங் கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். மேலும், விற்பனை எண்ணிக்கை ஒரு பொருட்டாக பார்க்காமல், ஃபோர்டு பிராண்டு மதிப்பை உயர்த்துவதற்கான மாடலாகவே பார்க்கப்படும்.

Most Read Articles
English summary
Now finally the Ford Mustang GT was seen testing around Automotive Research Association of India(ARAI) in Pune. This could only mean that its launch could be around the corner in India.
Story first published: Saturday, July 4, 2015, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X