மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவிக்கு முன்பதிவு அமோகம்... காரணங்கள் என்ன?

By Saravana

கடந்த செப்டம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக டியூவி 300 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. அடக்கமான வகை எஸ்யூவி மார்க்கெட்டில் களம் புகுந்த மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி சிறப்பான முன்பதிவை பெற்றிருக்கிறது.

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் இதுவரை 12,000 பேர் மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவிக்கு முன்பதிவு செய்துள்ளனர் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அந்த எஸ்யூவிக்கு வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவு கொடுத்திருப்பதற்கான காரணங்களை ஸ்லைடரில் காணலாம்.

எதிர்பாராத வரவேற்பு

எதிர்பாராத வரவேற்பு

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவிக்கு கிடைத்திருக்கும் 12,000 முன்பதிவு மஹிந்திராவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும், அந்த எஸ்யூவிக்கு கிடைத்திருக்கும் 50 சதவீத முன்பதிவுகள் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலுக்கே கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சரியான விலை

சரியான விலை

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி மாடலாக வந்திருப்பதன் மூலமாகவும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இருப்பதன் காரணமாகவும், கூடுதல் வரிகளை தவிர்க்க முடிந்திருக்கிறது. இதனால், சரியான விலையில், சிறப்பான அம்சங்கள் கொண்ட மாடலாக மஹிந்திரா டியூவி 300 வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. சென்னையில் பேஸ் மாடல் ரூ.7.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. போட்டியாளர்களைவிட விலை குறைவான டீசல் மாடல் என்பதால் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஏஎம்டி மாடல்

ஏஎம்டி மாடல்

ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்டதாக வந்திருப்பதே இந்த வரவேற்புக்கு மிக முக்கிய காரணம். க்ளட்ச் பெடல் இல்லை என்பதால், ஆட்டோமேட்டிக் காரை ஓட்டுவது போன்ற அனுபவத்தை இந்த ஏஎம்டி மாடல் தருகிறது. இதற்கான ஏஎம்டி கியர்பாக்ஸ் ரிகார்டோ நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா சொந்தமாக உருவாக்கியுள்ளது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

இந்த எஸ்யூவியில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரை அளிக்கும் என்பதுடன், அதிகபட்சமாக 230 என்எம் என்ற அளவிற்கு சிறப்பான டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. டாப் வேரியணட்டில் மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 18.49 கிமீ மைலேஜை தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடைமுறையில் லிட்டருக்கு 12 கிமீ முதல் 14 கிமீ வரையிலான மைலேஜை பெற முடியும் என்று வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் இந்த எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளது. அத்துடன், 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் இருப்பதும், நீண்ட தூர பயணங்களின்போது அடிக்கடி பெட்ரோல் நிலையம் செல்ல வேண்டிய அவசியத்தை தவிர்க்கும்.

7 சீட்டர்

7 சீட்டர்

4 மீட்டர் நீளம், குறைவான பட்ஜெட், ஏஎம்டி கியர்பாக்ஸ், டீசல் எஞ்சின் என்பதையெல்லாம் தாண்டி, இந்த எஸ்யூவியில் கூடுதலாக 2 பேர் செல்வதற்கான இருக்கை வசதியையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். எனவே, பெரியவர்கள், சிறியவர்கள் என 7 பேர் வரை ஒரேநேரத்தில் பயணிக்கும் வசதியை வழங்குகிறது.

தரை இடைவெளி

தரை இடைவெளி

தரையிலிருந்து 184மிமீ அளவுக்கு தரை இடவெளி கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், எந்தவொரு சாலை நிலைகளையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

வலுவான உடற்கூடு கொண்டது. பேஸ் மாடலில் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாகவும், பிற வேரியண்ட்டுகளில் நிரந்தர பாதுகாப்பு அம்சமாகவும் இடம்பெற்றிருக்கிறது. கார்னர் பிரேக் கன்ட்ரோல் சிஸ்டமும், வளைவுகளில் கார் திரும்பும்போது, அந்த திசையில் ஒளியை வழங்கும் ஸ்டேட்டிக் ஹெட்லைட்ஸ் சிஸ்டமும் உள்ளது.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

டி4 வேரியண்ட்

பேஸ் மாடலில் பவர் விண்டோஸ், டில்ட் ஸ்டீயரிங் டிஜிட்டல் இம்மொபைலசர், ஹீட்டருடன் கூடிய ஏசி சிஸ்டம் ஆகியவை குறிப்பிட்டு கூறும்படி உள்ளன.

டி6 வேரியண்ட்

டி6 வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளுடன் சேர்த்து, கூடுதலாக கீ லெஸ் என்ட்ரி, வாய்ஸ் மெசேஜ் சிஸ்டம், புளூடூத் இணைப்பு வசதி கொண்ட 2 டின் ஆடியோ சிஸ்டம், ஃபுட் ஸ்டெப்ஸ் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.

டி8 வேரியண்ட்

பேஸ் மாடல் மற்றும் நடுத்தர மாடலில் இருக்கும் வசதிகளை சேர்த்து, கூடுதலாக அலாய் வீல்கள், டியூவல் ஏர்பேக்ஸ், ஸ்டாட்டிக் பென்டிங் ஹெட்லைட் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம், உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதியுடன் கூடிய ஓட்டுனர் இருக்கை, லம்பார் சப்போர், ரிவர்ஸ் அசிஸ்ட், ஃபேப்ரிங் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை குறிப்பிட்டு கூறலாம்.

தோற்றம்

தோற்றம்

இவற்றையெல்லாம் தாண்டி, ஒரு ஃப்ரெஷ் தோற்றத்தை வாடிக்கையாளர்கள் விரும்புவது சகஜம். அத்துடன், மஹிந்திரா பொலிரோ போன்றே நீடித்த உழைப்பை வழங்கும் என்று வாடிக்கையாளர்கள் மனதில் இருக்கும் நம்பகத்தன்மையும் மற்றொரு காரணமாக இருக்கிறது.

ஆனந்த் மஹிந்திராவின் மறுபக்கம்

மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு தமிழ் தெரியுங்கிறது உங்களுக்கு தெரியுமா?

Most Read Articles
English summary
Mahindra's latest small SUV, the TUV 300 has garnered 12,000 orders since its launch in September. Here are given some stand out features of the Mahindra TUV 300 suv.
Story first published: Monday, November 9, 2015, 16:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X