இதுதான் இந்தியா வரும் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி?!

By Saravana

நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்த ஹோண்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ ஸ்கெட்சுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பிரியோ அடிப்படையிலான இந்த காம்பேக்ட் எஸ்யூவி மாடலை BR- V என்ற பெயரில் அழைக்கிறது ஹோண்டா.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷிய மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவிற்கும் வரும் என்பதால் இந்த காம்பேக்ட் எஸ்யூவி பற்றிய தகவல்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

தாய்லாந்திலிருந்து செயல்படும் ஹோண்டாவின் ஆசிய பசிபிக் பிராந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும், இந்தோனேஷிய பி.டி. ஹோண்டா பிரிவும் இணைந்து எஸ்யூவியை உருவாக்கியுள்ளன.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

அமேஸ், மொபிலியோ கார்களை போன்றே இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியும் ஹோண்டா பிரியோ காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இந்தோனேஷிய மார்க்கெட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

இந்த காம்பேக்ட் எஸ்யூவி மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொண்டதாகவும், 7 பேர் அமர்ந்து பயணிக்கும் இடவசதி கொண்டதாகவும் இருக்கும்.

அறிமுகம்

அறிமுகம்

வரும் ஆகஸ்ட் மாதம் 20ந் தேதி முதல் 30ந் தேதி வரை இந்தோனேஷியாவின் தாங்கரெங் நகரில் நடைபெற இருக்கும் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆசிய மார்க்கெட்டுகளில் இந்த எஸ்யூவி விற்பனை செய்யப்படும் என்று ஹோண்டா தெரிவித்திருக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எஸ்யூவியை ஹோண்டா பார்வைக்கு வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மாடல்

இந்திய மாடல்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக அறிமுகம் செய்யப்படும்.

Most Read Articles
English summary
Now Honda has revealed sketches of its upcoming BR-V prototype, which is based on Brio hatchback. This model is going to make its debut at 2015 Indonesian International Auto Show. BR-V stands for ‘Bold Runabout Vehicle' explains Honda.
Story first published: Tuesday, June 30, 2015, 15:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X