ஹோண்டா பிஆர்- வி எஸ்யூவி அறிமுகம்... டஸ்ட்டர் போட்டியாளர், ஆனால், 7 சீட்டர் மாடல்!!

By Saravana

இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில், ஹோண்டா கார் நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

டிசைன்

டிசைன்

பிரியோ அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும், இந்த எஸ்யூவி மாடல் க்ரோம் க்ரில் அலங்காரத்துடன் முகப்பு கவர்கிறது. அடுத்து பக்கவாட்டில் மொபிலியோ எம்பிவி காரின் டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கிறது. 16 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

எஞ்சின்

எஞ்சின்

இந்தியாவில் வரும்போது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வரும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் வருகிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், வெகிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட் சிஸ்டம், இபிடி பிரேக் நுட்பம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

7 சீட்டர்

7 சீட்டர்

ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர், மாருதி எஸ் க்ராஸ் என இந்த செக்மென்ட்டில் உள்ள அனைத்து மாடல்களுமே 5 சீட்டர் மாடல்கள்தான். ஆனால், இந்த புதிய மாடல் 7 சீட்டர் எஸ்யூவியாக வருவது குறிப்பிடத்தக்கது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி மூலமாக இந்தியாவில் தரிசனம் தர இருக்கிறது. அதன் பின்னர் அடுத்த ஆண்டு மத்தியில் அல்லது பிற்பகுதியில் விற்பனைக்கு வந்துவிடும்.

Most Read Articles
English summary
Honda has finally unveiled its BR-V prototype at 2015 Indonesia Motor Show, which is also expected to be showcased in India. This compact SUV is based on their Brio platform, which has been used previously.
Story first published: Friday, August 21, 2015, 13:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X