ஹோண்டா பிஆர் வி காம்பேக்ட் எஸ்யூவி எப்போது இந்தியா வருகிறது?

By Saravana

அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில், புதிய ஹோண்டா பிஆர்- வி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் முதல் 7 சீட்டர் எஸ்யூவி மாடலாக வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய எஸ்யூவி பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவம்

வடிவம்

ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில், இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. 4,455 மிமீ நீளம், 1,735மிமீ அகலலம், 1,650மிமீ உயரம் கொண்டது. 2,660மிமீ வீல் பேஸ் கொண்டிருக்கும் இந்த எஸ்யூவி மூன்று வரிசை இருக்கைகளுக்கும் சிறப்பான இடவசதியை அளிக்கும்.

கிரிவுண்ட் கிளியரன்ஸ்

கிரிவுண்ட் கிளியரன்ஸ்

பிரியோ அடிப்படையிலான இந்த புதிய எஸ்யூவி மாடல் 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும். எனவே, இந்திய சாலை நிலைகளுக்கு மிக ஏற்றதாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், பகல்நேர விளக்குகள், ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்டுகள், சைடு கிளாடிங்குகள் கொண்டதாக வருகிறது. க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே போன்றவை இருக்கின்றன.

 எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். தவிரவும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் எதிர்பார்க்கலாம்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

எஸ்ஆர்எஸ் டியூவல் ஏர்பேக்ஸ், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெகிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகள் இந்தோனேஷிய மாடலில் இருக்கின்றன.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ஹோண்டா எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும். அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Honda BRV SUV To Be Unvieled In India Early Next Year.
Story first published: Saturday, September 26, 2015, 12:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X