ரீகால் பிரச்னை எதிரொலி: ஹோண்டா சிஇஓ அதிரடியாக பதவி நீக்கம்!

By Saravana

தொடர் ரீகால் பிரச்னைகளால் ஹோண்டா கார் நிறுவனத்தின் சிஇஓ., தகனோபு இட்டோவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தகஹிரோ ஹச்சிகோ புதிய சிஇஓ.,வாக பதவியமர்த்தப்பட உள்ளார்.

இதுவரை இல்லாத அளவிற்கு ஹோண்டா நிறுவனம் பல்வேறு நிதி நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. மேலும், ஏர்பேக்கில் எழுந்த தர பிரச்னைகளால் பல்வேறு நாடுகளில் பல மில்லியன் கார்களை தொடர்ந்து ரீகால் செய்து வருகிறது. இதன் காரணமாக, அந்த நிறுவனத்தின் தரம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. பல்வேறு நாடுகளில் தர பிரச்னை தொடர்பாக ஹோண்டா நிறுவனத்துக்கு பெரும் அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.

Takanobu Ito

இதனால், கடும் அதிருப்தி அடைந்திருக்கும் ஹோண்டா நிர்வாகம், தனது நிறுவனத்தின் சிஇஓ., தகனோபு மீது கடும் காட்டத்தை காட்டியிருக்கிறது. ஹோண்டா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தனது நிறுவனத்தின் சிஇஓ., தகனோபு இட்டோ பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

தகனோபுவுக்கு பதிலாக தகசிரோ புதிய சிஇஓ.,வாக நியமிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆனால், பங்குதாரர்களின் அனுமதிக்காக இந்த அறிவிப்பு தற்போது நிலுவையில் உள்ளது. பங்குதாரர்களின் ஒப்புதல் கிடைத்தவுடன் வரும் ஜூன் மாதத்தில் புதிய சிஇஓ.,வாக தகசிரோ பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஆட்டோமொபைல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஹோண்டாவின் இந்த அதிரடி முடிவு மற்றொரு சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, புதிதாக பதவியேற்க இருக்கும் தகசிரோ ஒட்டுமொத்த ஹோண்டா கார் நிறுவனத்தின் நிர்வாகத்தையும் திறம்பட செய்வதற்கு போதிய அனுபமில்லாதவராக மீடியோ செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஹோண்டா சிஇஓ., பதவி நீக்க அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஹோண்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பு சிறிதளவு சரிவடைந்தது.

Most Read Articles
English summary
Honda CEO Takanobu Ito will step down from his post in June, making way for new leaders to overhaul the Japanese automaker.
Story first published: Tuesday, February 24, 2015, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X