கூடுதல் கால வாரண்டிக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய ஹோண்டா!

By Saravana

ஹோண்டா கார்களுக்கான புதிய கூடுதல் கால வாரண்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முதல் உரிமையாளர் மட்டுமின்றி, ஹோண்டாவின் பழைய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் வாய்ப்புள்ளது.

ஹோண்டா Any Time Warranty என்ற பெயரில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கார் வாங்கிய தேதியிலிருந்து 7 ஆண்டுகளுக்கு குறைவான ஆயுள் கொண்ட கார்கள் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்குள் ஓடிய கார்களுக்கு மட்டுமே இந்த வாரண்டியை பெற முடியும்.

பழுது நீக்கும் செலவு, உதிரிபாகங்களை மாற்றுதல், பழுதான பாகங்களுக்கு மாற்று பாகங்களை பொருத்துதல் ஆகியவை இந்த வாரண்டி திட்டத்தின் கீழ் பெற முடியும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது. காரின் சர்வீஸ் ரெக்கார்டு, காரின் கன்டிஷன் ஆகியவற்றை பொறுத்து இந்த திட்டத்தின் கீழ் வாரண்டி க்ளெய்ம் வழங்கப்படும் என்றும் ஹோண்டா தெரிவித்துள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் சிட்டி, அமேஸ், மொபிலியோ உள்பட விற்பனை நிறுத்தப்பட்ட சிவிக், அக்கார்டு மற்றும் ஜாஸ் ஆகிய கார்களுக்கும் இந்த வாரண்டி திட்டம் பொருந்தும். கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள ஹோண்டா ஷோரூமை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஹோண்டா கார் நிறுவனத்தின் சென்னை டீலர்கள் விபரம்

Most Read Articles
English summary

 Honda has introduced a new warranty scheme for its vehicle owners, known as the Any Time Warranty. The Japanese manufacturer will provide more satisfaction and confidence to buyers with the new warranty scheme for vehicles.
Story first published: Monday, February 16, 2015, 10:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X