வெறும் 20 மாதங்களில் 1.5 லட்சம் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனை!

By Ravichandran

வெறும் 20 மாதங்களில் 1.5 லட்சத்திற்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பெற்று ஹூண்டாய் எலைட் ஐ20 கார் புதிய சாதனை படைத்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரவேற்பு, அதன் கார்களின் விற்பனையிலும் பிரதிபலிக்கிறது.

பெருமிதம்;

பெருமிதம்;

ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார்கள், 20 மாதத்தில் 1.5 லட்சத்திற்கும் கூடுதலான எலைட் ஐ20 கார்கள் விற்றுள்ளதை குறித்து, அந்த நிறுவனத்தின் உயர்அதிகாரி ராகேஷ் ஸ்ரீவாத்ஸவா மிகுந்த மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.

இந்த அளவிலான அபார விற்பனைக்கு, மக்கள் ஹூண்டாய் தயாரிப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், நன்மதிப்பும் தான் முக்கிய காரணம் என ராகேஷ் தெரிவித்தார்.

அறிமுக தேதி;

அறிமுக தேதி;

ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார் மார்ச் 2014-ல் அறிமுகம் செய்யபட்டது.

சந்தையில் ஆதிக்கம்;

சந்தையில் ஆதிக்கம்;

எலைட் ஐ20 கார்கள், இந்திய வாகன சந்தையின் பிரிமியம் காம்பேக்ட் செக்மண்ட்டில், 66% அளவிலான சந்தையை கட்டுபடுத்தி வருகின்றது.

தொடுதிரை சாதனம்;

தொடுதிரை சாதனம்;

ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார் மாடல் கார்களில் உள்ள சில சிறப்பு அம்சங்கள் குறித்த அலசல்களை பார்ப்போம்.

ஹூண்டாய் எலைட் ஐ20, ஐ20 ஆக்டிவ் கார் மாடல்களில் 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

இது பயணத்திற்கு தேவையான தகவல்களையும், வழிகாட்டு வசதியையும் அளிக்கும் ஆடியோ, வீடியோ நேவிகேஷன் சிஸ்டங்களை கொண்டுள்ளது.

மொபைல்போன் இணைக்கும் வசதி;

மொபைல்போன் இணைக்கும் வசதி;

ஹூண்டாய் ஐ20 காரில், புளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம், மொபைல்போனை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்க முடியும்.

இப்படியாக, இணைத்தபின், வாய்மொழி உத்தரவு மூலமாக போன் அழைப்புகளை பெறுவதற்கும், அழைப்பதற்கும் வசதிகள் உள்ளது. இப்படி செய் கார் ஓட்டும்போது ஏற்படும் கவனச் சிதறலை பெரும் அளவில் தவிர்க்க உதவுகிறது.

ரியர் வியூ கேமரா இணைப்பு;

ரியர் வியூ கேமரா இணைப்பு;

ஹூண்டாய் ஐ20 காரில், ரியர் வியூ கேமரா இணைக்கபட்டுள்ளது.

இந்த வசதி, எலைட் ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ் கார்களின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் மட்டுமே கிடைக்கின்றது. மேலும், இந்த சாதனங்கள் டாப் வேரியண்ட்களில் மட்டுமே பொருத்தபட்டுள்ளது.

நேவிகேஷன் சாதனம்;

நேவிகேஷன் சாதனம்;

ஹூண்டாய் ஐ20 காரில் பொறுத்தபட்டுள்ள புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தில் இருக்கும் ஆடியோ மற்றும் வீடியோ நேவிகேஷன் சாதனம்,

உயர்ரக வசதிகளை கொண்டுள்ளது.

இதில் உள்ள சேட்டிலைட் நேவிகேஷன் வசதியை, வாய்மொழி உத்தரவு வாயிலாகவும் கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடதக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களை குறித்து கூடுதலான தகவல்களை தெரிந்து கொள்ள,

ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களின் செய்திகள்

இங்கிலாந்தில், புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கூபே காரின் விலை விபரம்!

புதிய ஹோண்டா ஜாஸ் Vs ஹூண்டாய் எலைட் ஐ20: ஒப்பீட்டு பார்வை

Most Read Articles
English summary
Hyundai Elite i20 model has crossed the sales figures milestone of 1.5 lakh Cars, in and around 20 months duration. Hyundai Elite i20 model was launched in March 2014. It is the market leader in premium compact segment and it occupies around 66% of the market share in this segment.
Story first published: Thursday, November 26, 2015, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X