இந்தியாவில் தரிசனம் கொடுக்க ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவி தயார்!!

By Saravana

இந்திய கார் ஆர்வலர்கள் மற்றும் எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளறியுள்ள மாடல், ஹூண்டாய் ஐஎக்ஸ்25. சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் டிசைன் அட்டகாசமாக இருப்பதுதான் இந்தியர்களின் எதிர்பார்ப்புக்கு காரணம்.

மேலும், வழக்கம்போல் ஹூண்டாய் நிறுவனத்தின் தரமான பாகங்கள், வசதிகள் இருக்கும் என்ற நம்பிக்கையும் இந்த எஸ்யூவியை வாங்குவதற்கு இந்தியர்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறது. அதுபோன்று, காத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.

அதாவது, அடுத்த மாதம் இந்தியாவில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை ஹூண்டாய் பார்வைக்கு அறிமுகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாகப்பட்டது, விற்பனைக்கு முன் ஒரு முன்னோட்டமான அறிமுகம் இது. கூடுதல் தகவல்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

டிசைன்

டிசைன்

ஹூண்டாய் எலைட் ஐ20 காரைப் போன்றே இந்த எஸ்யூவியும் கலக்கலான டிசைனில் வருகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், பகல்நேர எல்இடி விளக்குகள், ஸ்கிட் பிளேட், கவர்ச்சியான க்ரில் அமைப்பு போன்றவை இந்த எஸ்யூவியின் முகப்புக்கு வலு சேர்க்கும் அம்சங்களாக இருக்கும். ரூஃப் ரெயில்கள், அலாய் வீல்கள், எல்இடி டெயில்லைட் க்ளஸ்ட்டர் போன்றவை இந்த எஸ்யூவியின் டிசைனின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கும்.

'பேபி' சான்டா ஃபீ

'பேபி' சான்டா ஃபீ

ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்ட்டுள்ளது. கண்ணை கவரும் தோற்றம் கொண்டிருக்கும் இந்த புதிய காம்பேக்ட எஸ்யூவியை ஒரு 'பேபி' சான்டா ஃபீ மாடலாக குறிப்பிடுகின்றனர்.

இடவசதி

இடவசதி

ரெனோ டஸ்ட்டரைப் போன்றே இதுவும் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி. 5 பேர் வசதியாக அமர்ந்து பயணிக்கலாம். 4 மீட்டரை விட சற்று கூடுதல் நீளம் கொண்டிருப்பதால் ஈக்கோஸ்போர்ட் போன்று மிக நெருக்கடியாக இல்லாமல், வசதியாக இருக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

இந்தியாவில் இரண்டு டீசல் எஞ்சின்கள் மற்றும் ஒரு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. அதாவது, 126 எச்பி பவரையும், 260 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 89 எச்பி பவரையும், 219 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலை பொறுத்தவரையில், 121 எச்பி பவரையும், 155 என்எம் டார்க்கை வழங்கும் 1.6 லிட்டர் எஞ்சின் கொண்டதாக இருக்கும். இவை அனைத்தும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. பின்னர் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மாடலும் அறிமுகம் செய்யப்படும்.

இன்டிரியர்

இன்டிரியர்

ஹூண்டாய் நிறுவனத்தின் பிற கார் மாடல்களில் இருக்கும் இன்டிரியர் அம்சங்கள் கலவையாக காணப்படுகிறது. ஸ்டீயரிங் வீல் வெர்னாவை போலவும், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் டிசைன் எலைட் ஐ20 கார் போலவும், சென்டர் கன்சோல் மற்றும் ஏசி வென்ட்டுகள் சான்டா ஃபீ எஸ்யூவியை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது. இந்த காரில் ஹூண்டாய் புளூலிங்க் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது.

மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

சோதனை நிலைகளில், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி ரூ.7.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai Motors is keen on entering new segments in Indian market. They recently introduced their very first crossover in the country, which has been christened 120 Active.
Story first published: Monday, May 18, 2015, 7:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X