ஐ20 காரின் உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் திட்டம்!

By Saravana

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த மாதம் எலைட் ஐ20 காரின் விற்பனை 10,000ஐ தாண்டியிருக்கிறது.

மேலும், ஐ20 பிராண்டில் அடுத்ததாக புதிய க்ராஸ்ஓவர் மாடலாக ஐ20 ஆக்டிவ் காரும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஐ20 பிராண்டுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பையும், தேவையையும் கருதி உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

Hyundai Elite i20

சென்னையிலுள்ள ஹூண்டாய் ஆலையில் அதிகபட்சமாக மாதத்திற்கு 10,000 ஐ20 கார்களை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கையை மேலும் கூட்டுவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆண்டுக்குள் விற்பனையில் 4 மில்லியன் கார்கள் என்ற இலக்கை எட்டும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அந்த நிறுவனம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
South Korean car maker Hyundai is planning to increase i20 production in India.
Story first published: Friday, March 20, 2015, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X