சென்னையில் தயாராக உள்ள புதிய ஃபோர்டு செடான் கார் பற்றிய தகவல்கள்!

By Saravana

அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் பெரும் முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தைத் தொடர்ந்து குஜராத்தில் புதிய கார் ஆலையை திறந்த அந்த நிறுவனம், அடுத்ததாக மீண்டும் சென்னையில் பெரும் முதலீட்டை செய்ய உள்ளது.

இந்த முறை சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் கார் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பெரிய அளவிலான முதலீட்டை செய்ய உள்ளது. ரூ.5,000 கோடி முதலீட்டுடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ள சென்னை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்தியாவுக்காக இரு புதிய கார் மாடல்களை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது. அதில், ஒன்று புதிய மிட்சைஸ் செடான் கார். அந்த காரை பற்றிய முக்கியத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முதல் கார் மாடல்

முதல் கார் மாடல்

சென்னை ஃபோர்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் முழுவதுமாக வடிவமைக்கப்பட இருக்கும் முதல் கார் மாடல் B500 என்ற குறியீட்டுப் பெயரிலான மிட்சைஸ் செடான் கார்.

புதிய பிளாட்ஃபார்ம்

புதிய பிளாட்ஃபார்ம்

புதிய B500 மிட்சைஸ் செடான் கார் முழுவதும் புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட உள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் ஃபோர்டு கார் மாடலும் இதுவே.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இதன் கான்செப்ட் மாடலையும், 2018ம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில், இதன் தயாரிப்பு நிலை மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இரண்டு ஆண்டுகளில் கான்செப்ட் நிலையிலிருந்து தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படும்.

இந்திய சப்ளையர்கள்

இந்திய சப்ளையர்கள்

இந்த புதிய காரின் பெரும்பான்மையான உதிரிபாகங்கள் அனைத்தும் இந்தியாவிலிருந்தே சப்ளை பெறப்படும். இதன்மூலம், சவாலான விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

 ஃபியஸ்ட்டாவுக்கு கல்தா

ஃபியஸ்ட்டாவுக்கு கல்தா

ஃபோர்டு ஃபியஸ்ட்டா காருக்கு மாற்றாக இந்த புதிய மிட்சைஸ் செடான் காரை விற்பனைக்கு கொண்டு வர ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. விற்பனையில் ஃபியஸ்ட்டா சொதப்பி வரும் நிலையில், இந்த புதிய மிட்சைஸ் செடான் கார் ஃபோர்டு நிறுவனத்துக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.

 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இந்த புதிய ஃபோர்டு மிட்சைஸ் செடான் கார் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ் போன்ற கார் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

இந்தியா தவிர்த்து வெளிநாடுகளுக்கும் இந்த புதிய மிட்சைஸ் செடான் காரை ஃபோர்டு நிறுவனம் ஏற்றுமதி செய்யும்.

புதிய எம்பிவி மாடல்

புதிய எம்பிவி மாடல்

புதிய மிட்சைஸ் செடான் காருக்கு அடுத்ததாக, சென்னையில் அமைக்கப்பட உள்ள புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ஒரு புதிய 7 சீட்டர் எம்பிவி காரையும் ஃபோர்டு வடிவமைக்க உள்ளது. இந்த கார் ரெனோ லாட்ஜி எம்பிவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

குறிப்பு: மாதிரிக்காக ஃபோர்டு ஃபியஸ்ட்டா காரின் படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ford #auto news
English summary
Ford will be investing INR 5,000 crores in its existing Chennai R&D centre to develop new products on the B500 project. Here are some important details about Ford B500 Project.
Story first published: Thursday, May 28, 2015, 10:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X