எக்ஸென்ட் உள்ளே, அமேஸ் வெளியே... ஏப்ரலில் டாப் - 10 கார்கள்!

கடும் சந்தைப் போட்டி காரணமாக டாப் 10 பட்டியலின் கடைசி இடங்களில் உள்ள கார் மாடல்கள் உள்ளே, வெளியே ஆட்டம் ஆடி வருகின்றன. குறிப்பாக, கடைசி இடத்துக்குத்தான் அதிக போடடி. மற்ற இடங்களில் அதிக மாற்றங்கள் இல்லை. வழக்கம்போல் முதல் நான்கு இடங்களை மாருதி கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கிறது.

கடந்த மாத பட்டியலில் இருந்து ஹோண்டா அமேஸ் கார் வெளியேற்றப்பட்டதுடன், அதன் நேர் போட்டியாளரான ஹூண்டாய் எக்ஸென்ட் உள்ளே வந்துள்ளது. சரி, கடந்த மாதத்தில் டாப் 10 இடங்களை பெற்ற கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

10. ஹூண்டாய் எக்ஸென்ட்

10. ஹூண்டாய் எக்ஸென்ட்

கடந்த மாதம் ஹோண்டா அமேஸை வெளியேற்றிவிட்டு, ஹூண்டாய் எக்ஸென்ட் பட்டியலுக்குள் வந்துள்ளது. ஏப்ரலில் 4,666 ஹூண்டாய் எக்ஸென்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், ஓர் நல்ல விற்பனை எண்ணிக்கையையும் ஹூண்டாய் எக்ஸென்ட் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.

 09. மாருதி செலிரியோ

09. மாருதி செலிரியோ

மாருதி கார் நிறுவனத்துக்கு செலிரியோ முக்கிய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த மாதம் 5,309 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5,805 செலிரியோ கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரலில் விற்பனை சிறிது குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

 08. ஹூண்டாய் இயான்

08. ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான் கார் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. கடந்த மாதத்தில் 6,243 இயான் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலில் 6,500 இயான் கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், தற்போது விற்பனையில் சிறிது இறக்கம் காணப்படுகிறது.

07. ஹோண்டா சிட்டி

07. ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி கார் மிக வலுவான விற்பனையை பதிவு செய்து அந்த செக்மென்ட்டில் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 8,203 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகியுள்ளன. டீசல் மாடலிலும் இப்போது ஹோண்டா சிட்டி கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைந்து வருகிறது.

06. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

06. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

வசதிகள், வடிவமைப்பு, எஞ்சின் ஆப்ஷன்கள் என தன்னிறைவை தரும் ஹேட்ச்பேக் மாடலாக இருந்து வரும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காருக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த மாதம் 8,792 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

05. ஹூண்டாய் எலைட் ஐ20

05. ஹூண்டாய் எலைட் ஐ20

அசத்தலான டிசைன், இடவசதி காரணமாக இந்தியாவின் சிறந்த ஹேட்ச்பேக் மாடலாக விளங்குகிறது. இது அந்த காரின் விற்பனை மூலம் நிரூபணமாகி வருகிறது. கடந்த மாதம் 9,893 எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்துக்கு பெரும் பங்களிப்பை மாதாமாதம் வழங்கி வருகிறது எலைட் ஐ20 கார்.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கார் வாங்க விரும்புவோர்க்கு சிறந்த மதிப்புடைய மாடலாக தொடர்ந்து விளங்கி வருகிறது. வசதிகள், போதுமான இடவசதி, அடக்கமான டிசைன், சிறந்த பெட்ரோல் எஞ்சின் ஆகியவை இந்த காரின் ப்ளஸ் பாயிண்ட்டுகள். கடந்த மாதம் 13,872 வேகன் ஆர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கண்ணை மூடிக்கொண்டு 4வது இடம் வேகன் ஆருக்கே என்று கூறிவிடலாம்.

03. மாருதி டிசையர்

03. மாருதி டிசையர்

அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு, அடக்கமான டிசைன் என்று மாருதி டிசையர் காரின் மார்க்கெட் தொடர்ந்து ஸ்திரமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 18,316 மாருதி டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

02. மாருதி ஸ்விஃப்ட்

02. மாருதி ஸ்விஃப்ட்

இந்திய வாடிக்கையாளர்களின் முதன்மையான ஹேட்ச்பேக் தேர்வு மாடலாக தொடர்ந்து இருந்து வருகிறது. சிறந்த பெர்ஃபார்மென்ஸ், ஸ்போர்ட்டியான வடிவமைப்பு ஆகியவை இந்த காருக்கு தொடர்ந்து வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் 18,444 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

பட்ஜெட் விலை, சிறந்த மைலேஜ், குறைந்த பராமரிப்பு கொண்ட மாருதி ஆல்ட்டோ பிராண்டு கார்கள் முதல் முறை கார் வாங்குவோரின் ஃபர்ஸ்ட் சாய்ஸ். கடந்த மாதத்திதல் 21,531 ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலில் 16,673 கார்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 செய்தித் தொகுப்பு

டாப் 10 செய்தித் தொகுப்பு

01. எமது டாப் 10 சிறப்பு செய்திகள்...

Most Read Articles
English summary
India's Top 10 selling cars in April 2015.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X