ஹோண்டா பிஆர் வி காம்பேக்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்

By Saravana

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஹோண்டா பிஆர் வி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தற்போது பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த புதிய எஸ்யூவியில் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவில், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை ஹோண்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த புதிய மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எஸ்யூவி மாடலை காணும் வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைக்கும்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

அமேஸ்,மொபிலியோ, சிட்டி கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த புதிய எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெளியாகி இருக்கும் தகவலின்படி, ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் இருக்கும்.

உற்பத்தி

உற்பத்தி

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம உற்பத்தியும் துவங்கப்பட்டு, அதே மாதத்தில் டெலிவிரியும் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் உள்ள ஹோண்டா ஆலையில்தான் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி உற்பத்தி செய்யப்படும்.எ

7 சீட்டர் மாடல்

7 சீட்டர் மாடல்

இது காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டாலும், 7 பேர் வரை பயணம் செய்யும் இருக்கை வசதியுடன் வர இருக்கிறது. இது இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
India Specific Honda BR V SUV Model May Come With 1.6 Lt Diesel Engine.
Story first published: Thursday, October 8, 2015, 15:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X