புத்தம் புதிய ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் செடான் கார் அறிமுகம்!

By Saravana

சிறிய வகை ஸ்போர்ட்ஸ் செடான் மாடலாக ஜாகுவார் வடிவமைத்திருக்கும் புதிய எக்ஸ்இ கார் மாடல் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் முதல்முறையாக வெளியுலகிற்கு தரிசனம் கொடுத்துள்ளது.

முழுமையான அலுமினியம் கட்டுமானத்தில், இலகு எடை மற்றும் உறுதிமிக்க கட்டமைப்பில் மாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

Jaguar XE

இந்த காரில் 340 எச்பி பவரை அளிக்கும் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக விற்பனைக்கு வர இருக்கிறது. இரண்டிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

இதன் அதிக நீளம் கொண்ட வீல்பேஸ் மூலம் உட்புறத்தில் மிகச்சிறப்பான இடவசதியை அளிக்கும். அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், மெரிடியன் ஆடியோ சிஸ்டம், ஹெட் அப் டிஸ்ப்ளே, வைஃபை ஹாட் ஸ்பாட், ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் போன்ற பல நவீன தொழில்நுட்ப வசதிகளை தாங்கி வருகிறது.

இந்த ஆண்டு சர்வதேச அளவிலும், அடுத்த ஆண்டு அமெரிக்காவிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Most Read Articles
English summary

 The all-new Jaguar XE has made its first North American appearance at the 2015 North American International Auto Show in Detroit. The XE goes on sale in 2015 in Global Markets and in 2016 in North America. The high-performance S model will be at the top of the global line-up at launch in 2015.
Story first published: Thursday, January 15, 2015, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X