'மேட் இன் இந்தியா' மகிமை... ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் விற்பனை எங்கேயோ போயிடுத்து!!

By Saravana

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் ஜாகுவார் எக்ஸ்ஜே கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இறக்குமதி மாடலைவிட ரூ.24 லட்சம் வரை குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதால், இந்த காருக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதனால், இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் விற்பனை 300 சதவீதம் உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் பெருமைபட கூறியுள்ளது. மேலும், ஜாகுவார் நிறுவனத்தின் விற்பனையில் பெரும் ஏற்றத்தை கொடுத்திருப்பதோடு, இந்தியாவிலேயே கார்களை அசெம்பிள் செய்தால், கிடைக்கும் பலனையும் அந்த நிறுவனம் வெறும் 12 மாதங்களில் பெற்றிருக்கிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் உள்ளிட்ட உயர் சொகுசு வகை மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவிலேயே ஜாகுவார் எக்ஸ்ஜே கார் அசெம்பிள் செய்யப்படுவதன் காரணமாக, பென்ஸ் எஸ் கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்களுக்கு போட்டியான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, இந்த பட்ஜெட்டில் கார் வாங்க விரும்பியவர்களின் கவனம் முழுவதும் இப்போது ஜாகுவார் எக்ஸ்ஜே பக்கம் திரும்பியிருக்கிறது. இது விற்பனையிலும் எதிரொலிக்கிறது.

டிசைன்

டிசைன்

போட்டியாளர்களின் தயாரிப்புகளைவிட ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் பிரத்யேக டிசைனும், பிராண்டு மதிப்பும் இந்த காரின் விற்பனையை ராக்கெட் வேகத்தில் உயர வைத்திருக்கிறது. அதாவது, இதுவரை இல்லாத அளவுக்கு ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் விற்பனை உயர்ந்திருப்பதாக அந்த நிறுவனம் புலாகாங்கிதத்துடன் அடைந்திருக்கிறது.

புனேயில் அசெம்பிள்

புனேயில் அசெம்பிள்

புனேயில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையிலுள்ள ஜாகுவார் கார்களுக்கான உற்பத்தி பிரிவில்தான் இந்த கார் அசெம்பிள் செய்யப்படுகிறது. ஜாகுவார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் ஒத்துழைப்புடன் இந்திய சந்தையை கலக்க ஆரம்பித்திருக்கிறது ஜாகுவார் நிறுவனம்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

நம் நாட்டில் ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் 3.0 லிட்டர் எஞ்சின் கொண்ட டீசல் மாடல் அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 275 பிஎஸ் பவரையும், 600 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 விதமான வேகத்தில் காரை செலுத்துவதற்கான இசட்எஃப் தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

இந்த காரில் 20 ஸ்பீக்கர்களுடன் கூடிய மெரிடியன் சர்ரவுண்ட் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புற பயணிகளுக்கு இரண்டு ஐ- பேட் சாதனங்கள் மூலம் பொழுதுபோக்கு வசதிகளை பெற முடியும். இதுதவிர, ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் கொண்டுள்ளது.

வேரியண்ட் விபரம்

வேரியண்ட் விபரம்

பெட்ரோல் மாடல் இறக்குமதி செய்யப்படுகிறது. போர்ட்ஃபோலியோ என்ற ஒரே வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் மாடல் பிரிமியம் மற்றும் போர்ட்ஃபோலியோ ஆகிய இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. டீசல் மாடல் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது.

விலை விபரம்

விலை விபரம்

  • 2.0 லிட்டர் பெட்ரோல் போர்ட்ஃபோலியோ: ரூ.97.22 லட்சம்
  • 3.0 லிட்டர் டீசல் பிரிமியம்: ரூ.96.05 லட்சம்
  • 3.0 லிட்டர் டீசல் போர்ஃபோலியோ: ரூ.1.03 கோடி
Most Read Articles
English summary
Jaguar has reported than in 12 months their sales for XJ have grown by 300 percent. This sales record is the highest growth percentage witnessed by the manufacturer.
Story first published: Friday, June 5, 2015, 10:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X