உலகின் அதிக சக்திவாய்ந்த புதிய காரை அறிமுகப்படுத்திய கோனிக்செக்!!

By Saravana

1500 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட புதிய கோனிக்செக் கார் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. உலகில் இதுவரை வெளியிடப்பட்ட சாதாரண தயாரிப்பு நிலை கார்களில் அதிக சக்திவாய்ந்த கார் மாடல் இதுதான்.

கோனிக்செக் ரெகெரா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய காரில் புதுமையான டிரைவ் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, டிரான்ஸ்மிஷன் இல்லாமல் வடிவமைக்கப்பட்ட காராக இதனை தெரிவிக்கின்றனர். இதனால், இந்த காரின் எடை வெகுவாக குறைக்க முடிந்திருக்கிறது.

கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

இந்த கார் உற்பத்திக்கு செல்வதை ஏற்கனவே கோனிக்செக் நிறுவனம் உறுதிப்படுத்திவிட்டது. மொத்தம் 80 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் கார்

ஹைபிரிட் கார்

இந்த கார் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த காரில் 5.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3 எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து செயல்படும். இவை இணைந்து 1,500 பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்தும். மணிக்கு அதிகபட்சமாக 400 கிமீ வேகம் வரை செல்லும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

பேட்டரி சார்ஜில் மட்டும் 37 கிமீ தூரம் பயணிக்க முடியும். சாதாரண கியர்பாக்ஸ் தொழில்நுட்பம் இல்லாததால் காரின் எடை 200 கிலோ வரை குறைக்கப்பட்டிருக்கிறது.

டைரக்ட் டிரைவ்

டைரக்ட் டிரைவ்

சாதாரண கார்களில் இருப்பது போன்ற டிரைவ் சிஸ்டம் இல்லாமல் டைரக்ட் டிரைவ் என்ற புதிய வகை தொழில்நுட்பத்தில் எஞ்சின் ஆற்றல் சக்கரங்களுக்கு கடத்தப்படும். இதனால், எளிதான பிக்கப் மற்றும் சிறப்பான செயல்திறன் கொண்டதாக இருக்கும். மேலும், பாகங்கள் உராய்வு தவிர்க்கப்படுவதுடன், நீடித்த உழைப்பையும் பாகங்கள் தரும். கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் இந்த புதிய டைர்க்ட் டிரைவ் தொழில்நுட்பம் கோனிக்செக் நிறுவனர் கிறிஸ்டியன் வான் கோனிக்செக் எண்ணத்தில் உருவாகியுள்ளது. உடனடியாக, அதனை உருவாக்கி வெற்றி கண்டிருக்கின்றனர். இந்த டைரக்ட் டிரைவ் சிஸ்டத்திற்கு காப்புரிமைக்கும் பதிவு செய்துள்ளனர்.

விலை

விலை

1.89 மில்லியன் டாலர் விலையில் இந்த கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
The Koenigsegg Regera has opened the doors the ultimate in technology by taking the gearbox away from the company's latest creation. The car uses a technology called direct drive.
Story first published: Tuesday, March 3, 2015, 18:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X