மின்சாரத்தில் இயங்கும் ஸ்போர்ட்ஸ் காரின் படங்களை வெளியிட்ட மஹிந்திரா

By Saravana

மின்சார கார் தயாரிப்பில் முன்னோடியான ரேவா நிறுவனத்தை மஹிந்திரா கையகப்படுத்தியது முதல் புதிய மின்சார கார் மாடல்களை அதிக ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது இ2ஓ என்ற மின்சார காரை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம் புதிய மின்சார கார்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

மேலும், கடந்த ஆண்டு மின்சாரத்தில் இயங்கும் ஸ்போர்ட்ஸ் ரக காரின் மாதிரி மாடல் ஒன்றையும் பார்வைக்கு வைத்திருந்தது. ஹாலோ என்று பெயரில் அழைக்கப்படும் அந்த மாடல் அனைவரின் ஆர்வத்தையும் அதிகரித்தது. இந்த நிலையில், இந்த புதிய மின்சார ஸ்போர்ட்ஸ் காரின் படங்களை தற்போது மஹிந்திரா தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

01. பிரத்யேக மாடல்

01. பிரத்யேக மாடல்

மின்சாரத்தில் இயங்கும் ஸ்போர்ட்ஸ் காரை தயாரிப்பதன் மூலம் இந்திய மின்சார கார் மார்க்கெட்டிற்கு புதிய நிலைக்கு எடுத்துச் செல்ல இருக்கிறது மஹிந்திரா. மஹிந்திரா ஹாலோ மின்சார ஸ்போர்ட்ஸ் காரின் முன்பக்கத்தில் எல்இடி ஹெல்லைட்டுகள் புதிய டிசைன் தாத்பரியத்தை கொண்டிருக்கிறது. பனிவிளக்குகள், பம்பர், பானட், பின்புறத்தை பார்ப்பதற்கான கண்ணாடி என அனைத்திலும் ஒரு புதுமையான டிசைன் தெரிகிறது.

02. பக்கவாட்டுத் தோற்றம்

02. பக்கவாட்டுத் தோற்றம்

மின்சாரத்தில் இயங்கும் ஸ்போர்ட்ஸ் கார் என்பதால், மிகவும் அடக்கமாக தோற்றத்தை கொண்டுள்ளது. அலாய் வீல்கள் டிசைனும் புதுமையாக இருப்பதுடன், கதவுகளின் முன்புறத்தில் ரேவா பேட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டு கதவுகளை கொண்ட மின்சார ஸ்போர்ட்ஸ் கார் மாடல்.

03. பின்புறத் தோற்றம்

03. பின்புறத் தோற்றம்

பின்புறத்தோற்றமும் நச்சென்று இருக்கிறது. மெல்லிதாக மேலேறும் கூரை, எமது தயாரிப்பு என்று பெருமையுடன், கர்வமுடன் கூறும் வகையில் நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும் மஹிந்திரா லோகோ ஆகியவை இந்த ஸ்போர்ட்ஸ் காரின் டிசைனுக்கு வலுசேர்க்கும் அம்சங்கள். எல்இடி டெயில் லைட்டுகள் இன்னும் கவர்ச்சியை தருகிறது.

04. இன்டிரியர்

04. இன்டிரியர்

மஹிந்திரா ஹாலோ காரின் இன்டிரியர் நவீன தொழில்நுட்ப வசதிகளை பரைசாற்றும் மையமாக காணப்படுகிறது. அடிப்பாகம் தட்டையான ஸ்டீயரிங் வீல், சென்டர் கன்சோல் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் பெரிய தொடுதிரை ஆகியவை இந்த காரை நவீன யுகத்திற்கான மாடலாக காட்டுகிறது.

05. சார்ஜிங் பாயிண்ட்

05. சார்ஜிங் பாயிண்ட்

இந்த காருக்கான மின்சார சார்ஜிங் பாயிண்ட் காரின் பின்புறத்தில் கண்ணாடியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எந்தவொரு காரிலும் காணப்படாத ஒரு அம்சமாக கூறலாம். மொத்தத்தில் இந்த கார் தயாரிப்புக்கு நிலைக்கு சென்றால், மின்சார கார் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் மஹிந்திராவின் வல்லமை உலக அளவில் பேசப்படும்.

Most Read Articles
English summary
Mahindra currently sells the Reva e2o in India, which is a fully electric vehicle. They have now revealed images of their upcoming electric sports car on their website.
Story first published: Tuesday, May 19, 2015, 7:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X