மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம் - முழு விபரம்

By Saravana

மஹிந்திரா ஜீட்டோ என்ற புதிய மினி டிரக் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பயன்பாட்டுக்கு தக்கவாறு இருவிதமான கொள்ளளவு கொண்ட பின்புற எடை ஏற்றும் பக்கெட் கொண்டதாகவும், 3 விதமான பக்கெட் நீளம் கொண்ட மாடல்களில் வந்திருக்கிறது.

டாடா ஏஸ் ஸிப் மினி டிரக்கிற்கு போட்டியாக வந்திருக்கும் இந்த புதிய மினி டிரக் பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

உற்பத்தி

உற்பத்தி

தெலங்கானா மாநிலம், சகீராபாத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மஹிந்திராவின் புதிய வாகன தொழிற்சாலையில் இந்த புதிய மினி டிரக் உற்பத்தி செய்யப்படுகிறது.

எடை சுமக்கும் திறன்

எடை சுமக்கும் திறன்

இந்த மினி டிரக் 600 கிலோ மற்றும் 700 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்டதாக கிடைக்கிறது. இதுதவிர, பயன்பாட்டை பொறுத்து 8 வேரியண்ட்டுகளில் தேர்வு செய்து கொள்ள முடியும். வேரியண்ட் விபரத்தை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

மூன்று மாடல்கள்

மூன்று மாடல்கள்

மூன்று வித நீளம் கொண்ட மாடல்களில் கிடைக்கும். 5.5 அடி நீளம் 600 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்ட எஸ் சீரிஸ் எஸ்11 மற்றும் எஸ்16 என்ற இரு வேரியண்ட்டுகளிலும், 6 அடி நீளம் பக்கெட் கொண்ட எல் சீரிஸ் மாடல் 600 கிலோ மற்றும் 700 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்டதாக தலா 2 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இவை எல்6-11, எல்6-16 ஆகிய வேரியண்ட்டுகளிலும், எல்-7-11 மற்றும் எல்7-16 ஆகிய மாடல்களிலும் கிடைக்கும். 6.5 அடி பக்கெட் நீளம் கொண்ட எக்ஸ் சீரிஸ் எக்ஸ்-7-11 மற்றும் எக்ஸ்7- 16 ஆகிய இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மினி டிரக்கில் எம்_டியூரா டைரக்ட் இன்ஜெக்ஷன் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 600 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்ட மாடலில் 11 எச்பி பவரை அளிக்கும் விதத்திலும், 700 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்ட மாடலில் 16 எச்பி பவரை அதிகபட்சமாக அளிக்கும் விதத்திலும் இந்த எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த எம்_டியூரா டீசல் எஞ்சின் லிட்டருக்கு 37.6 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது டாடா ஏஸ் ஸிப் மினி டிரக்கைவிட 30 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வசதிகள் மற்றும் வண்ணங்கள்

வசதிகள் மற்றும் வண்ணங்கள்

தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், 12V மொபைல்போன் சார்ஜர், பூட்டும் வசதியுடன் க்ளவ் பாக்ஸ், ஆடியோ பிளேயர் வசதிகள் உள்ளன. டைமன்ட் ஒயிட், சன்ரைஸ் ரெட், மேங்கோ யெல்லோ, அல்ட்ராமரைன் புளூ, பிரிமியம் பீஜ் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

 விலை விபரம்

விலை விபரம்

ஸ்லைடில் விலைப்பட்டியலை காணலாம்.

Most Read Articles
English summary
Mahindra has today launched its new small commercial vehicle, the Jeeto. Mahindra claims that the Jeeto is the first vehicle to offer to customers ‘a modular range of 8 mini-trucks'.
Story first published: Wednesday, June 24, 2015, 15:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X