ரூ.4,000 கோடி முதலீட்டில் செய்யாறில் மஹிந்திராவின் புதிய வாகன தொழிற்சாலை!

By Saravana

ரூ.4,000 கோடி முதலீட்டில் செய்யாறில் புதிய வாகன ஆலையை அமைக்க இருக்கிறது மஹிந்திரா நிறுவனம். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது.

ரூ.4,000 கோடி முதலீட்டை இருகட்டங்களாக செய்ய மஹிந்திரா முடிவு செய்திருக்கிறது. இந்த புதிய ஆலைக்கு 255 ஏக்கர் நிலத்தை வழங்குவதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளதாக மஹிந்திரா ஆட்டோமேட்டிவ் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ஆலையை அமைப்பதற்காக வரும் மே மாதம் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். நிலம் ஒதுக்கீடு செய்தவுடன் முதலில் வாகனங்களுக்கான சோதனை ஓட்ட மையத்தை அமைக்க இருப்பதாகவும், அடுத்ததாக வாகன தொழிற்சாலையை கட்ட இருப்பதாகவும் தெரிவித்தார்.

மஹிந்திராவின் புதிய எஸ்யூவி மாடல்கள் இந்த புதிய ஆலையிலிருந்துதான் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் பவன் கோயங்கோ தெரிவித்தார். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் இந்த ஆலையிலிருந்து அந்நிறுவனத்தின் யுட்டிலிட்டி வாகன மாடல்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இந்த புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவிலேயே மஹிந்திராவின் மிகப்பெரிய வாகன ஆலை என்ற பெருமையை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Auto major Mahindra & Mahindra today said it would invest around Rs 4,000 crore in Tamil Nadu, after the state government decided to allocate land for the company's project at Cheyyar, near Chennai. 
Story first published: Saturday, February 14, 2015, 16:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X